பெங்களூரில் ஜாகுவார் எக்ஸ்ஜே ஃபேஸ்லிஃப்ட் மாடல் விற்பனைக்கு வந்தது!
பெங்களூரில் ஜாகுவார் எக்ஸ்ஜே காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த சொகுசு காரின் மதிப்பை உயர்த்தும் விதத்தில் கூடுதல் வசதிகளுடன் ஃபேஸ்லிஃப்ட் மாடலை ஜாகுவார் களமிறக்கியுள்ளது.
பின்புறம் மசாஜ் இருக்கைகள், கூடுதல் ஹெட்ரூம், எல்இடி ரீடிங் விளக்குகள், எலக்ட்ரிக் அட்ஜெஸ்ட் வசதி கொண்ட பின்புற வைன்ட்ஷீல்டுக்கான சன் ஷேடு, பிசினஸ் டேபிள், பின் இருக்கை பயணிகளின் வசதிக்காக பிரத்யேக இன்போடெயின்மென்ட் திரைகள் போன்றவை கூடுதல் வசதிகளாக சேர்க்கப்பட்டுள்ளன.

2014 மாடலாக வந்திருக்கும் இந்த புதிய ஜாகுவார் எக்ஸ்ஜே காரில் 271 பிஎச்பி சக்தியை அளிக்கும் 2,993சிசி வி6 டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் கொண்டது.
ஜாகுவார் எக்ஸ்ஜே கார் பிரிமியம் லக்சுரி மற்றும் போர்ட்போலியோ ஆகிய இரண்டு மாடல்களில் விற்பனைக்கு கிடைக்கும். 2014 ஜாகுவார் எக்ஸ்ஜே பிரிமியம் லக்சுரி மாடல் ரூ.93,74,000 விலையிலும், எக்ஸ்ஜே போர்ட்போலியோ மாடல் ரூ.100.45 லட்சம் பெங்களூர் எக்ஸ்ஷோரூம் விலையிலும் கிடைக்கும்.


Click it and Unblock the Notifications








