ஆடி, பிஎம்டபிள்யூவை கதிகலங்க வைக்கும் டாடாவின் ஜாகுவார் பிராண்டு
இந்திய சொகுசு கார் மார்க்கெட்டில் ஆதிக்கம் செலுத்தி வரும் பிஎம்டபிள்யூ, ஆடி மற்றும் பென்ஸ் நிறுவனங்களை டாடாவின் கீழ் செயல்பட்டு வரும் பிரிட்டிஷ் கார் பிராண்டான ஜாகுவார் லேண்ட்ரோவர் கதிகலங்க வைத்துள்ளது. கடந்த ஆண்டு லேண்ட்ரோவர் ஃப்ரீலேண்டர் 2 எஸ்யூவியை இந்தியாவிலேயே அசெம்பிளிங் செய்ய துவங்கிய ஜாகுவார் லேண்ட்ரோவர் தற்போது எக்ஸ்எஃப் காரை இந்தியாவிலேயே அசெம்பிளிங் செய்ய துவங்கியிருக்கிறது.
இந்தியாவில் அசெம்பிளிங் செய்வதன் மூலம் மிகக்குறைந்த விலையில் ஜாகுவார் லேண்ட்ரோவர் கார்கள் விற்பனைக்கு கிடைப்பதால் பிஎம்டபிள்யூ, ஆடி, பென்ஸ் நிறுவனங்களுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. தற்போது எக்ஸ்எஃப் காரை ரூ.44.5 லட்சம் என்ற சவாலான விலையில் இறக்கியுள்ளது.
இதற்கு முன்னர் இந்த கார் ஒரு கோடி விலையில் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டது. இதுபோன்று, அனைத்து கார்களையும் அடுத்தடுத்து புனேயில் உள்ள ஆலையில் அசெம்பிளிங் செய்ய டாடா ஜாகுவார் லேண்ட்ரோவர் திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் சவாலான விலையில் விற்பனைக்கு வந்திருக்கும் ஜாகுவார் எக்ஸ்எஃப் காரின் சிறப்பம்சங்களை ஸ்லைடரில் பார்க்கலாம்.

எஞ்சின்
தற்போது 2.2 லிட்டர் டீசல் எஞ்சின், 3.0 லிட்டர் வி6 டர்போ டீசல் எஞ்சின் மற்றும் 5.0 லிட்டர் வி8 பெட்ரோல் எஞ்சின் என மூன்று மாடல்களில் கிடைக்கும்.

டிரான்ஸ்மிஷன்
வாடிக்கையாளர்களிடம் பெரும் மதிப்பு கொண்ட 8 ஸ்பீடு இசட்எஃப் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் பொருத்தப்பட்டுள்ளது. குறைந்த கார்பன் புகை, அதிக எரிபொருள் சிக்கனம், சீறும் பிக்கப் மற்றும் ஸ்மூத் ஆகியவைதான் இசட்எஃப் டிரான்ஸ்மிஷனின் சிறப்பம்சங்கள்.

ஸ்டான்டர்டு ஆக்சஸெரீஸ்
ரியர் வியூ கேமரா, டிவி டியூனர், நேவிகேஷன் சிஸ்டம், ஆப்டிமைஸ்டு ஆடியோ, நேவிகேஷன் கன்ட்ரோல், டச் ஸ்கிரீன், பேடில் கியர் ஷிப்ட், ஸ்பேர் வீல், எலக்ட்ரிக் சன் ரூஃப் உள்ளிட்ட ஏராளமான ஸ்டான்டர்டு ஆக்சஸெரீஸ்களாக இருக்கும்.

எஞ்சின் பவர்
2.2 லிட்டர் டீசல் எஞ்சின் 190 பிஎஸ் பவரையும், 3.0 லிட்டர் வி6 டீசல் எஞ்சின் 275 பிஎஸ் பவரையும் வெளிப்படுத்தும். 5.0 லிட்டர் வி8 பெட்ரோல் எஞ்சின் 379 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்துவதாக இருக்கும்.

விலை விபரம்
2.2 லிட்டர் டீசல் மாடல் ரூ.44.5 லட்சம் மும்பை எக்ஸ்ஷோரூம் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

என்ன பயன்
இந்தியாவிலேயே அசெம்பிளிங் செய்யப்பட்டு மிகக்குறைந்த விலையில் ஜாகுவார் லேண்ட்ரோவர் கார்கள் விற்பனைக்கு கிடைப்பதால் பிஎம்டபிள்யூ, பென்ஸை விட்டுவிட்டு வாடிக்கையாளர்களின் கவனம் மெல்ல ஜாகுவார் லேண்ட்ரோவர் பக்கம் திரும்பியிருக்கிறது.


Click it and Unblock the Notifications








