'மேட் இன் இந்தியா' ஜாகுவார் எக்ஸ்ஜே ஆடம்பர கார் விற்பனைக்கு வந்தது!
இந்தியாவில் அசெம்பிள் செய்யப்படும் ஜாகுவார் எக்ஸ்ஜே ஆடம்பர காரின் டீசல் மாடல் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் இந்த கார் அறிமுகம் செய்யப்பட்டது.
இந்த நிலையில், இதுவரை இறக்குமதி செய்து விற்பனை செய்யப்பட்டு வந்த கார் இனி இந்தியாவிலேயே அசெம்பிள் செய்து விற்பனை செய்யப்படும். புனேயில் உள்ள டாடா மோட்டார்ஸ் ஆலையில் உள்ள ஜாகுவார் உற்பத்தி பிரிவில் இந்த கார் அசெம்பிள் செய்யப்படுகிறது. எக்ஸ்எஃப் காரை தொடர்ந்து தற்போது எக்ஸ்ஜே ஆடம்பர செடான் காரும் இந்தியாவில் அசெம்பிள் செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

டீசல் மாடல்
இந்தியாவில் தற்போது எக்ஸ்ஜே காரின் டீசல் மாடல் மட்டும் அசெம்பிள் செய்து விற்பனை செய்யப்பட உள்ளது. 275 பிஎஸ் பவரையும், 600 என்எம் அதிகபட்ச டார்க்கையும் அளிக்கும் 2993சிசி 6 சிலிண்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. 8 ஸ்பீடு இசட்எஃப் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் கொண்டது.

வசதிகள்
மெரிடியன் மியூசிக் சிஸ்டம், நேவிகேஷன் சிஸ்டம், எல்சிடி டிஸ்ப்ளே, பார்க்கிங் அசிஸ்ட், உயர்தர லெதர் போன்றவற்றுடன் கிடைக்கும்.

கடும் போட்டி
பென்ஸ் எஸ் கிளாஸ், பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் கார்களுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்த நிலையில், இந்தியாவிலேயே அசெம்பிள் செய்து விற்பனை செய்யப்பட உள்ள ஜாகுவார் எக்ஸ்ஜே காரும் அந்த கார்களுக்கு இணையான விலையில் வந்துள்ளதால், வாடிக்கையாளர் கவனம் ஜாகுவார் பிராண்டு மீது விழும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.

விலை
தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய ஜாகுவார் எக்ஸ்ஜே டீசல் மாடல் ரூ.92 லட்சம் மும்பை எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. முன்னதாக இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்ட மாடல் ரூ.1.16 கோடி விலையில் விற்பனையானது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








