டாடா கார்களுக்கு உயிர் கொடுக்கப்போகும் ஜேஎல்ஆர் எஞ்சின்கள்!

நாட்டின் மிகப்பெரிய வாகன தயாரிப்பு நிறுவனமாக திகழும் டாடா மோட்டார்ஸ் பயணிகள் வாகன மார்க்கெட்டில் கடும் சரிவை சந்தித்து வருகிறது. சென்ற நிதியாண்டில் டாடா மோட்டார்ஸின் கார் விற்பனை 24 சதவீதம் வரை சரிவு கண்டிருக்கிறது.
இந்த நிலையில், விற்பனை சரிவை தடுத்து நிறுத்தும் முயற்சிகளை டாடா மோட்டார்ஸ் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. மேலும், ஜாகுவார் லேண்ட்ரோவரிடமிருந்து எஞ்சின்களை சப்ளை பெற இருப்பதும் தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து ஜாகுவார் லேண்ட்ரோவர் நிறுவனத்தின் சிஇஓ ரால்ஃப் ஸ்பெத் கூறியதாவது,"டாடாவுடன் இணைந்து புதிய தயாரிப்புகளை உருவாக்கும் திட்டம் இல்லை. அதேவேளை, தொழில்நுட்ப பகிர்மானம் மற்றும் எஞ்சின் சப்ளை செய்யும் திட்டங்கள் உள்ளன.
சிறிய கார் தயாரிப்பில் போதிய அனுபவமும், திறனும் டாடாவிடம் உள்ளது. எனவே, அதில் எங்களது ஒத்துழைப்பு தேவைப்படாது. அதேவேளை, இங்கிலாந்து மார்க்கெட்டுக்காக தயாரித்து வரும் 2.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின்களை எதிர்காலத்தில் டாடாவுக்கு சப்ளை செய்வோம்.
மேலும், தற்போது தயாரிக்கப்பட்டு வரும் சிறிய எஞ்சின்களையும் டாடாவுக்கு தருவோம்," என்றார்.
இந்த நிலையில், ஜாகுவார் லேண்ட்ரோவர் சப்ளை செய்ய இருக்கும் 2.0 லிட்டர் எஞ்சின்களை சுமோ, சஃபாரி மற்றும் ஆரியா உள்ளிட்ட கார்களில் பொருத்த வாய்ப்பு இருப்பதாக ஆட்டோமொபைல் துறையினர் தெரிவிக்கின்றனர்.


Click it and Unblock the Notifications








