கிரெடிட் கார்டு ஸ்வைப் செய்யுங்க.. நானோவை ஓட்டிச் செல்லுங்கள்!

கார் விற்பனை படுமந்தமாக இருந்து வருவதால் சலுகைகளை கணக்கு வழக்கு இல்லாமல் அறிவித்து வருகின்றன கார் நிறுவனங்கள். ரூம் போட்டு யோசிக்காத குறையாக வாடிக்கையாளர்களை கவர புதுமையான பல திட்டங்கள் பற்றிய அறிவிப்பும் வந்த வண்ணம் உள்ளது.
இப்போது நானோ காரை கிரெடிட் கார்டு மூலம் வாங்கும் வாய்ப்பை டாடா மோட்டார்ஸ் அறிவித்துள்ளது. கிரெடிட் கார்டில் செலுத்திய பணத்தை மாதத் தவணைகளாக மாற்றிக் கொள்ளவும் முடியும். அதுவும் 0 சதவீத வட்டியில். இந்த தொகையை 12 மாதங்களில் ஒரு லட்சம் கடனுக்கு ரூ.8,333 என்ற வீதத்தில் மாதத் தவணைகளாக கட்டலாம்.
காலையில் கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தினால் எளிய நடைமுறைகளுடன் அன்று மாலையிலேயே நானோ காரை டெலிவிரி கொடுக்க ஏற்பாடு செய்துள்ளது டாடா. இந்த சிறப்பு கிரெடிட் கார்டு மாதத் தவணைத் திட்டத்துக்காக ஆக்ஸிஸ் வங்கி, எச்எஸ்பிசி, ஐசிஐசிஐ, கோடக் மஹிந்திரா மற்றும் ஸ்டான்டர்டு சாட்டர்டு வங்கிகளுடன் டாடா மோட்டார்ஸ் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.
மேற்கண்ட வங்கிகளின் கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள் நாட்டின் 26 நகரங்களிலுள்ள 76 டாடா மோட்டார்ஸ் டீலர்ஷிப்புகளை இந்த திட்டம் மூலம் நானோ காரை வாங்கிக் கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டிருப்பதாக டாடா மோட்டார்ஸ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








