2014 மாடல் எவோக் காரின் டீசர் படத்தை வெளியிட்ட லேண்ட்ரோவர்
2014 மாடல் எவோக் காரின் டீசரை லேண்ட்ரோவர் வெளியிட்டிருக்கிறது. இந்த மாத இறுதியில் துவங்க இருக்கும் நியூயார்க் ஆட்டோ ஷோவில் இந்த புதிய கார் பார்வைக்கு வைக்கப்பட உள்ளது.
புதிய எவோக் மாடல் இரட்டை வர்ணம் கொண்டதாக இருக்கும். ரேஞ்ச்ரோவரில் இருக்கும் அதே அலுமினிய சேஸிஸ் மூலம் புதிய எவோக் வடிவமைக்கப்படுவதால் எடை கணிசமாக குறையும்.

புதிய எவோக் எஸ்யூவியின் எஞ்சினில் எந்த மாற்றமும் இருக்காது. தற்போது விற்பனையில் இருக்கும் எஞ்சின் ஆப்ஷனுடன் கிடைக்கும்.
மேலும், ஜெனீவா மோட்டார் ஷோவில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய 9 ஸ்பீடு டிரான்ஸ்மிஷனுடன் புதிய எவோக் வரும். அடுத்த ஆண்டு இந்த புதிய எஸ்யூவி அறிமுகமாகும் என லேண்ட்ரோவர் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications








