அடுத்து எலக்ட்ரிக் செடான், எலக்ட்ரிக் ஸ்கூட்டர்: மஹிந்திரா சூசகம்
அடுத்து எலக்ட்ரிக் செடான் கார் மற்றும் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்த இருப்பதாக மஹிந்திரா குழுமத் தலைவர் ஆனந்த் மஹிந்திரா சூசகமாக தெரிவித்தார்.
இ2ஓ எலக்ட்ரிக் கார் அறிமுக விழாவில் கலந்து கொண்ட ஆனந்த் மஹிந்திராவிடம் எதிர்கால திட்டங்கள் குறித்து செய்தியாளர்கள் வினவினர். இதற்கு பதிலளித்த ஆனந்த் மஹிந்திரா அடுத்ததாக செடான் கார் மற்றும் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தும் முயற்சிகள் நடந்து வருவதாக தெரிவித்தார்.

ஆனால், இந்த புதிய மாடல்கள் அறிமுகம் குறித்து வேறு எதுவும் கூற இயலாது என அவர் திட்டவட்டமாக தெரிவித்தார். எலக்ட்ரிக் காருக்கான மார்க்கெட் நிலவரம் குறித்து தற்போது ஆராய்ந்து வருவதாகவும் ஆனந்த் மஹிந்திரா தெரிவித்தார்.
வெரிட்டோ கார் பிளாட்பார்மில் புதிய எலக்ட்ரிக் காரை மஹிந்திரா அறிமுகப்படுத்த முயற்சி மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டு டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் இந்த கார் கான்செப்ட் நிலையில் இருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








