சென்னையில் மஹிந்திரா ஹேட்ச்பேக் கார் சோதனை ஓட்டம்!
மஹிந்திரா நிறுவனம் சிறிய கார் மார்க்கெட்டின் மீது குறிவைத்து காய் நகர்த்தி வருகிறது. இதற்காக, புதிய ஹேட்ச்பேக் காரையும், 4 மீட்டர் நீளத்துக்கு குறைவான குட்டி செடான் காரையும் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இந்த இரண்டு கார்களும் தற்போது விற்பனை செய்யப்பட்டு வரும் வெரிட்டோ பிளாட்பார்மில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த கார்கள் சமீபத்தில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டபோது எடுக்கப்பட்ட படங்களை கடந்த வாரம் டிரைவ்ஸ்பார்க் தளம் வெளியிட்டிருந்தது. இந்த நிலையில், மஹிந்திராவின் இந்த புதிய ஹேட்ச்பேக் கார் சமீபத்தில் சென்னையில் சோதனை ஓட்டங்கள் நடத்தப்பட்டது. சென்னை, திருமங்கலம் அருகே சோதனை நடத்தப்பட்டபோது மோட்டார் விகடன் வாசகர் முரளி இந்த காரை படம் பிடித்துள்ளார். இந்த ஸ்பை ஷாட் படங்கள் மற்றும் முன்பு புனே அருகே சோதனை நடத்தப்பட்டபோது எடுக்கப்பட்ட படங்களையும் ஸ்லைடரில் காணலாம்.

மஹிந்திரா ஹேட்ச்பேக் கார் - ஸ்பை ஷாட்ஸ்

மஹிந்திரா ஹேட்ச்பேக் கார் - ஸ்பை ஷாட்ஸ்

மஹிந்திரா ஹேட்ச்பேக் கார் - ஸ்பை ஷாட்ஸ்

மஹிந்திரா குட்டி செடான் கார் - ஸ்பை ஷாட்ஸ்

மஹிந்திரா வெரிட்டோ

மஹிந்திரா வெரிட்டோ
Image Source: Motor Vikatan FB page


Click it and Unblock the Notifications








