கவர்ச்சியாக வந்த மஹிந்திரா எக்ஸ்யூவி 500 ஸ்போர்ட்ஸ்: முழு விபரம்!

By Saravana

மஹிந்திரா எக்ஸ்யூவி 500 எஸ்யூவியின் ஸ்போர்ட்ஸ் எடிசன் மாடல் இன்று விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ரூ.13.94 லட்சம் பெங்களூர் எக்ஸ்ஷோரூம் விலையில் எக்ஸ்யூவி 500வின் W8 டாப் வேரியண்ட்டில் கூடுதல் அம்சங்களை சேர்த்து இந்த ஸ்பெஷல் எடிசன் மாடலை வெளியிட்டிருக்கிறது மஹிந்திரா.

ஸ்போர்ட்ஸ் எடிசனில் மொத்தம் 1,000 மஹிந்திரா எக்ஸ்யூவி 500 எஸ்யூவிக்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட உள்ளன. இந்திய மோட்டார்ஸ்போர்ட்ஸ் மற்றும் ராலி கார் பந்தயங்களில் முன்னிலை வகிப்பதையும், பங்களிப்பையும் வெளிப்படுத்தும் விதத்தில் இந்த ஸ்போர்ட்ஸ் எடிசனை வெளியிட்டுள்ளதாக மஹிந்திரா வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


சிறப்பம்சங்கள்

சிறப்பம்சங்கள்

மஹிந்திரா எக்ஸ்யூவி 500 எஸ்யூவியின் ஸ்போர்ட்ஸ் எடிசனில் இடம்பெற்றிருக்கும் சிறப்பம்சங்களின் விபரத்தை படங்களுடன் அடுத்தடுத்த ஸ்லைடுகளில் காணலாம்.

டீகெல்

டீகெல்

பானட்ட்டில் டீகெல் பொறிக்கப்பட்டிருக்கிறது. கதவு கைப்பிடிகள், ரியர் வியூ கண்ணாடிகளிலும் டீகெல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. 140 பிஎச்பி பவரையும், 330 என்எம் டார்க்கையும் அளிக்கும் எம்ஹாக் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது.

ஸ்போர்ட்ஸ் டீகெல்

ஸ்போர்ட்ஸ் டீகெல்

எக்ஸ்யூவி 500வின் பக்கவாட்டில் கதவுகளுக்கு கீழே ஸ்போர்ட்ஸ் எடிசன் என்பதை குறிக்கும் டீகெல் உள்ளதை காணலாம்.

அலாய் வீல்

அலாய் வீல்

இந்த ஸ்பெஷல் எடிசன் மாடலில் பிரத்யேக டிசைனிலான அலாய் வீல்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

 ரியர் வியூ கேமரா

ரியர் வியூ கேமரா

ஸ்போர்ட்ஸ் எடிசன் மாடலில் ரியர் வியூ கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இதுதவிர, ஜிபிஎஸ், டிவிடி, சிடி, எம்பி3, எஃப்எம், யுஎஸ்பி, ஐபாட் கனெக்ட்டிவிட்டி, டிரைவர் இன்ஃபர்மேஷன் சிஸ்டம், மைக்ரோ ஹைபிரிட் தொழில்நுட்பம், டியூவல் ஏசி, புரொஜெக்டர் ஹெட்லைட், வாய்ஸ் கமென்ட் வசதி, ரிவர்ஸ் பார்க்கிங் அசிஸ்ட், எல்இடி பார்க்கிங் விளக்குகள், 6 இஞ்ச் இன்போடெயின்மென்ட் சிஸ்டம் போன்ற ஏராளமான வசதிகளை கொண்டுள்ளது.

 லெதர் இருக்கைகள்

லெதர் இருக்கைகள்

ஃபேப்ரிக் வேலைப்பாடுகளுடன் லெதர் இருக்கைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

ஸ்போர்ட்ஸ் பேட்ஜ்

ஸ்போர்ட்ஸ் பேட்ஜ்

எக்ஸ்யூவி 500வின் பின்புறத்தில் ஸ்போர்ட்ஸ் பேட்ஜ் கொடுக்கப்பட்டுள்ளது.

பனி விளக்குகள்

பனி விளக்குகள்

பனி விளக்குகள் அமைந்துள்ளதை எடுப்பாக காட்டும் விதத்தில் சிவப்பு நிற பிளாஸ்டிக் பட்டை கொடுக்கப்பட்டிருக்கிறது.

ரூஃப் ரெயில்

ரூஃப் ரெயில்

ஸ்டைலான ரூஃப் ரெயில்களும் கவரும் அம்சமாக கூறலாம். ரூ.13.94 லட்சம் பெங்களூர் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு கிடைக்கும்.

More from DriveSpark

Article Published On: Thursday, June 5, 2014, 19:09 [IST]
English summary
Mahindra has announced the launch of the limited edition ‘XUV500 Sportz’ built on its W8 model. Priced at Rs. 13.94 Lacs (Ex-showroom Bengaluru), the ‘XUV500 Sportz’ stands out and comes packed with premium features and plush interiors.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+