மனதுக்கு இதம் தரும் புதிய வண்ணத்தில் மஹிந்திரா எக்ஸ்யூவி!
அறிமுகம் செய்யப்பட்ட நாள் முதல் இன்று வரை மஹிந்திரா எக்ஸ்யூவி மீதான ஈர்ப்பு வாடிக்கையாளர்களுக்கு இன்னும் குறையவில்லை.
இதனால், விற்பனையில் தொடர்ந்து வெளுத்து வாங்கி வருகிறது மஹிந்திரா. தற்போது வல்கேனோ பிளாக், சாட்டின் ஒயிட், மூன்டஸ்ட் சில்வர், டுஸ்கான் ரெட், ஒபுலன்ட் பர்ப்புள் மற்றும் டால்பின் கிரே ஆகிய 6 வண்ணங்களில் எக்ஸ்யூவி விற்பனைக்கு கிடைக்கிறது.

இந்த நிலையில், புதிய ஆர்டிக் புளூ என்ற புதிய வண்ணத்தில் மஹிந்திரா எக்ஸ்யூவி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது எக்ஸ்யூவி மீதான ஈர்ப்பு கொண்ட வாடிக்கையாளர்களின் தேர்வு பட்டியலில் நிச்சயம் இடம்பெறும்.
மஹிந்திரா எக்ஸ்யூவின் உற்பத்தி சமீபத்தில் அதிகரிக்கப்பட்டுள்ளதால் காத்திருப்பு காலம் வெகுவாக குறைந்து வருகிறது. ரூ.11.7 லட்சம் முதல் ரூ.14.5 லட்சம் விலையில் மஹிந்திரா எக்ஸ்யூவி 500 விற்பனைக்கு கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








