என்ஜாய் எஃபெக்ட்: 'புது' ஸைலோவை அவசரமாக களமிறக்கிய மஹிந்திரா!
செவர்லே என்ஜாய் அறிமுகமான மறுநாளே புதிய ஸைலோ வேரியண்ட்டுகளை மஹிந்திரா விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. எச் சீரிஸ் ஸைலோ என்ற பெயரில் விற்பனைக்கு வந்துள்ள இந்த ஸைலோவில் எம்-ஹாக் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. முந்தைய ஸைலோவில் 2.5 லிட்டர் எம்ஈகிள் எஞ்சின் பொருத்தப்பட்டிருந்தது.
இது குறைந்த பவர் கொண்டதுடன், குறைந்த மைலேஜ் தரும் என்பதால் அதற்கு மாற்றாக தற்போது அதிக பவர் மற்றும் கூடுதல் மைலேஜ் தரும் 2.2 லிட்டர் எம்ஹாக் எஞ்சினை பொருத்தியுள்ளனர். மார்க்கெட் போட்டியை சமாளிக்கும் வகையில் இந்த புதிய ஸைலோவை மஹிந்திரா விற்பனைக்கு விட்டுள்ளது.

புதிய வேரியண்ட்கள்
2.5 லிட்டர் எம்டிஐ சிஆர்டிஇ எஞ்சின் பொருத்தப்பட்ட மாடல் டி2 மற்றும் டி4 வேரியண்ட்களிலும், 2.2 லிட்டர் எம்ஹாக் பொருத்தப்பட்ட புதிய ஸைலோ எச்4, எச்8, எச்9 ஆகிய மூன்று புதிய வேரியண்ட்களில் கிடைக்கும்.

எம்ஹாக் எஞ்சின்
புதிய ஸைலோவில் பொருத்தப்பட்டிருக்கும் எம்ஹாக் எஞ்சின் 118 எச்பி பவரையும், 280 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும்.

மைலேஜ்
அராய் சான்றுபடி எம்ஹாக் எஞ்சின் பொருத்தப்பட்ட மாடல் லிட்டருக்கு 14.02 கிமீ மைலேஜ் தரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எச்4 வேரியண்ட்
எச்4 பேஸ் வேரியண்ட்டில் ஏபிஎஸ் பிரேக் கொடுக்கப்பட்டிருக்கிறது.

எச்8 வேரியண்ட்
எச்8 வேரியண்ட்டில் ஏபிஎஸ் பிரேக் மட்டுமின்றி டூயல் ஏர்பேக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

எச்9 வேரியண்ட்
எச்9 டாப் வேரியண்ட்டில் வாய்ஸ் கமான்ட் தொழில்நுட்பம், குரூஸ் கன்ட்ரோல், டிஜிட்டல் டிரைவ் அசிஸ்ட் சிஸ்டம், கூடுதல் நிலைத்தன்மையை தரும் சஸ்பென்ஷன், ரிவர்ஸ் பார்க்கிங் அசிஸ்ட் ஆகிய வசதிகள் உள்ளன.

புதிய வண்ணம்
டால்பின் கிரே என்ற புதிய வண்ணத்திலும் புதிய ஸைலோ கிடைக்கும்.

விலை
பிஎஸ்4 மாசுக் கட்டுப்பாட்டு அம்சம் கொண்ட எச் வேரியண்ட்கள் ரூ.8.23 லட்சம் (மும்பை எக்ஸ்ஷோரூம்)ஆரம்ப விலை முதல் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








