தொழில்நுட்பக் கோளாறு: எக்ஸ்யூவியை திரும்ப பெறும் மஹிந்திரா

எக்ஸ்யூவியில் சில தொழில்நுட்பக்கோளாறுகள் இருப்பதாக வாடிக்கையாளர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். இதுதொடர்பாக, மஹிந்திரா நடத்திய ஆய்விலும் அது உறுதியாகியிருக்கிறது.
இதையடுத்து, தொழில்நுட்பப் பிரச்னை இருப்பதாக கருதப்படும் 2011 முதல் 2012ம் ஆண்டு வரை குறிப்பிட்ட காலத்தில் தயாரிக்கப்பட்ட எக்ஸ்யூவி கார்களை திரும்ப பெறுவதாக மஹிந்திரா அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது.
புளூயிட் ஹோஸ், முன்பக்க பவர் விண்டோ யூனிட் மற்றும் இடது புற வைப்பர் பிளேடு கவர் ஆகியவற்றை இலவசமாக மாற்றித் தருவதாக மஹிந்திரா தெரிவித்துள்ளது.
இதுதவிர, மேலும் சில தொழில்நுட்ப பிரச்னை உள்ள பாகங்களை மஹிந்திரா மாற்றித் தருவதற்கும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், மஹிந்திரா மேற்கண்ட பாகங்களை மட்டுமே லிஸ்ட்டில் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு தகவல் அனுப்பப்படும் என மஹிந்திரா தெரிவித்துள்ளது. ஆனால், எத்தனை கார்களை திரும்பபெறப்போகிறது என்ற விபரத்தை வெளியிடவில்லை.


Click it and Unblock the Notifications








