25,000 எக்ஸ்யூவி கார்கள் திரும்பபெறப்படும்: மஹிந்திரா

By Saravana

மொத்தம் 25,000 எக்ஸ்யூவி கார்களை திரும்ப பெற இருப்பதாக மஹிந்திராவின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

தொழில்நுட்பக் கோளாறு கொண்ட பாகங்களை மாற்றித் தருவதற்காக குறிப்பிட்ட காலத்தில் தயாரிக்கப்பட்ட எக்ஸ்யூவி 500 கார்களை திரும்ப பெறுவதாக மஹிந்திரா சில நாட்களுக்கு முன் அறிவித்தது.

XUV 500

புளூயிட் ஹோஸ், முன்பக்க பவர் விண்டோ யூனிட் மற்றும் இடது புற வைப்பர் பிளேடு கவர் ஆகியவற்றை இலவசமாக மாற்றித்தரப்படும் என தெரிவிக்கப்பட்டது.

2011 முதல் 2012ம் ஆண்டு வரை தயாரிக்கப்பட்ட எக்ஸ்யூவி கார்களை திரும்ப பெறுவதாக மஹிந்திரா அறிவிப்பு வெளியிட்டிருந்தது. ஆனால், எத்தனை கார்கள் திரும்ப பெறும் என்று தெரிவிக்கவில்லை.

இந்த நிலையில், மொத்தம் 25,000 எக்ஸ்யூவி கார்களை திரும்ப பெற இருப்பதாக மஹிந்திரா உயரதிகாரி கூறியிருக்கிறார். இது தொடர்பாக, வாடிக்கையாளர்களுக்கு முறைப்படி தகவல் தெரிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேற்குறிப்பிட்ட பாகங்களை தவிர மேலும் சில தொழில்நுட்ப பிரச்னை உள்ள பாகங்களை மாற்றித் தருவதற்கும் மஹிந்திரா முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Thursday, March 14, 2013, 17:30 [IST]
English summary
Mahindra and Mahindra has recalled its flagship SUV XUV500 due to fluid hose, front power window units and the left wiper blade cover issues. Approximately 25,000 vehicles will be covered in the exercise, a top official said.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+