18ந் தேதி அறிமுகமாகிறது 4 சீட்டர் எலக்ட்ரிக் கார்!

இந்த புதிய எலக்ட்ரிக் காரில் 39.4 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் எலக்ட்ரிக் மோட்டார் பொருத்தப்பட்டிருக்கும். ரூ.5 லட்சம் விலையில் விற்பனைக்கு வரும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
பெங்களூரில் அமைக்கப்பட்டிருக்கும் புதிய ஆலையில் இந்த புதிய எலக்ட்ரிக் கார் உற்பத்தி செய்யப்பட இருக்கிறது. இதுகுறித்து மஹிந்திரா ஆட்டோமோட்டிவ் பிரிவு தலைவர் பவன் கோயங்கோ கூறுகையில், "எதிர்காலத்துக்கு தேவையான போக்குவரத்து தீர்வாக இந்த எலக்ட்ரிக் காரை முன்னோடியாக அறிமுகப்படுத்துவதில் பெருமை கொள்கிறோம்," என்றார்.
லித்தியம் அயான் பேட்டரி பொருத்தப்பட்ட மாடலை ஒருமுறை சார்ஜ் செய்தால் 100 கிமீ தூரம் வரை செல்லலாம் என மஹிந்திரா ரேவா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த எலக்ட்ரிக் காரில் ஒரு கிலோமீட்டர் செல்வதற்கு 50 பைசா மட்டுமே செலவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








