ரூ.5.6 லட்சத்தில் மஹிந்திரா வைப் டீசல் கார் அறிமுகம்!

வெரிட்டோ செடான் காரை 4 மீட்டருக்குள் சுருக்கி 3 பாக்ஸ் கொண்ட காராக களமிறக்கியிருக்கிறது மஹிந்திரா. 3 வேரியண்ட்களில் விற்பனைக்கு வந்திருக்கும் இந்த காரில் 65 பிஎஸ் பவரையும், 160என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது.
இந்த காரில் பொருட்கள் வைப்பதற்கு 330 லிட்டர் பூட் ரூம் கொடுக்கப்பட்டு டிசைன் செய்யப்பட்டுள்ளது. வெரிட்டோ போன்றே இந்த கார் லிட்டருக்கு 20.8 கிமீ மைலேஜ் தரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏபிஎஸ் உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகளுடன் வந்திருக்கும் இந்த காரின் விலை விபரத்தை கீழே காணலாம்.
மும்பை எக்ஸ்ஷோரூம் விலை விபரம்
டி2 : ரூ.5.63 லட்சம்
டி4 : ரூ.5.89 லட்சம்
டி6 : ரூ.6.49 லட்சம்


Click it and Unblock the Notifications








