ஒரு லட்சத்தை கடந்த மாருதி ஆல்ட்டோ 800 கார் விற்பனை!

கடந்த ஆண்டு அக்டோபரில் ஆல்ட்டோ 800 காரை மாருதி விற்பனைக்கு கொண்டு வந்தது. 48 பிஎஸ் பவரை வெளிப்படுத்தும் புதிய 796சிசி பெட்ரோல் எஞ்சினுடன் ஆல்ட்டோ 800 விற்பனைக்கு வந்தது. மேலும், கூடுதல் மைலேஜ், புதிய டிசைன் மற்றும் சரியான விலை ஆகியவையும் வாடிக்கையாளர்களை கவர்ந்தது.
இதனால், ஆல்ட்டோ 800 காருக்கான முன்பதிவு தொடக்கம் முதலே எகிடுதகிடாக அதிகரித்தது. முன்பதிவுக்கு தக்கவாறு மாருதியும் ஆல்ட்டோ 800 காரின் உற்பத்தியை கணிசமாக அதிகரித்து வந்தது.
இந்த நிலையில், இந்த மாதத்தின் இரண்டாவது வாரத்தில் ஆல்ட்டோ 800 காரின் விற்பனை ஒரு லட்சத்தை கடந்தது. இதன்மூலம், குறுகிய காலத்தில், அதாவது 144 நாட்களில் அதிக விற்பனையான கார்களின் பட்டியலில் ஆல்ட்டோ 800 காரும் இடம் பிடித்துள்ளது.


Click it and Unblock the Notifications








