சிஎன்ஜியில் இயங்கும் எர்டிகாவை விற்பனைக்கு விட்டது மாருதி
ரூ.6.52 லட்சம் ஆரம்ப விலையில் சிஎன்ஜியில் இயங்கும் புதிய எர்டிகா காரை மாருதி விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.
எர்டிகா க்ரீன் என்ற பெயரில் சிஎன்ஜி எர்டிகா விற்பனைக்கு கிடைக்கும். எல்எக்ஸ்ஐ மற்றும் விஎக்ஸ்ஐ ஆகிய இரண்டு வேரியண்ட்களில் மட்டுமே கிடைக்கும்.

டெல்லி, என்சிஆர், குஜராத், மும்பை, புனே, ஆந்திரா, உத்தர பிரதேசம் மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களில் சிஎன்ஜி எரிவாயு கிடைக்கும் இடங்களில் இந்த புதிய எர்டிகா விற்பனை செய்யபப்படும்.
ஆல்ட்டோ, வேகன்-ஆர், ஈக்கோ, எஸ்எக்ஸ்-4 மற்றும் எஸ்டீலோ கார்களை தொடர்ந்து தற்போது எர்டிகாவும் சிஎன்ஜி மாடலில் விற்பனைக்கு வந்துள்ளது. இதன்மூலம், பெட்ரோல், டீசல், சிஎன்ஜி ஆகிய மூன்று எரிபொருள் மாடல்களில் கிடைக்கும் காராக எர்டிகா மாறியுள்ளது.
எல்எக்ஸ்ஐ பேஸ் வேரியண்ட் ரூ.6.52 லட்சம் விலையிலும், விஎக்ஸ்ஐ வேரியண்ட் ரூ.7.30 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படும் என்று மாருதி தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








