லிமிடேட் எடிசன் மாருதி ஈக்கோ அறிமுகம் - விபரம்
வாடிக்கையாளர்களை கவரும் வகையில் கூடுதல் ஆக்சஸெரீஸ்களுடன் லிமிடேட் எடிசன் ஈக்கோ காரை மாருதி அறிமுகம் செய்துள்ளது. மார்க்கெட்டில் கிடைக்கும் குறைந்த விலை யுட்டிலிட்டி ரக காரான ஈக்கோ தற்போது 5 சீட்டர் மற்றும் 7 சீட்டர் மாடல்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், ஈக்கோவுக்கு கூடுதல் மதிப்பு சேர்க்கும் விதத்தில் 7 புதிய ஆக்சஸெரீஸ்களுடன் லிமிடேட் எடிசனை அறிமுகம் செய்துள்ளது. ஈக்கோ ஸ்மைல்ஸ் என்ற பெயரில் வந்திருக்கும் இந்த ஈக்கோ காரின் கூடுதல் ஆக்சஸெரீஸ்களுக்கு ரூ.9,490 மட்டுமே கூடுதலாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. கூடுதல் விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.

மியூசிக் சிஸ்டம்
இந்த காரில் யுஎஸ்பி போர்ட் வசதியுடன் கூடிய டபுள் டின் மியூசிக் சிஸ்டம் ஸ்டான்டர்டு ஆக்சஸெரீயாக கிடைக்கும். 15 செமீ., ஸ்பீக்கர்களும் ஈக்கோவுக்கு கூடுதல் மதிப்பு தருகிறது.

இதர ஆக்சஸெரீஸ்கள்
இரட்டை வண்ண சீட் கவர்கள், வீல் கவர்கள், தரைவிரிப்புகள், மட் பிளாப் மற்றும் லிமிடேட் எடிசன் பேட்ஜ், கிராபிக்ஸ் டிசைன் ஸ்டிக்கர்கள் ஆகியவை கூடுதல் ஆக்சஸெரீஸ்களாக இருக்கும்.

எஞ்சின்
ஈக்கோ காரில் 73 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுடனும், சிஎன்ஜி மாடலிலும் கிடைக்கிறது.

மைலேஜ்
நகர்ப்புறத்தில் லிட்டருக்கு 11கிமீ மைலேஜையும், நெடுஞ்சாலையில் 15கிமீ மைலேஜையும் தரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

7 சீட்டரில் ஏசி கிடையாது
7 சீட்டர் மாடலில் ஏசி வசதி இல்லை.

சென்னை ஆன்ரோடு விலை
சென்னை ஆன்ரோடு விலை
5 சீட்டர்: ரூ.3,82,806
5 சீட்டர் + ஏசி: ரூ.4,17512
5 சீட்டர் + சிஎன்ஜி: ரூ.4,59,580
5 சீட்டர் + ஏசி+ சிஎன்ஜி: ரூ.5,01,442
7 சீட்டர்: ரூ.4,02,490


Click it and Unblock the Notifications








