12 கூடுதல் அம்சங்களுடன் லிமிடேட் எடிசன் ரிட்ஸ் அறிமுகம்
கூடுதல் அம்சங்களுடன் கூடிய லிமிடேட் எடிசன் ரிட்ஸ் காரை மாருதி அறிமுகம் செய்துள்ளது. @buzZ என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் இந்த புதிய ரிட்ஸ் காரில் 12 கூடுதல் ஆக்சஸெரீஸ்கள் மற்றும் அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
ரிட்ஸ் காரின் அனைத்து வேரியண்ட்களிலும் லிமிடேட் எடிசன் கிடைக்கும். வேரியண்ட்டுக்கு தக்கவாறு ரூ.10,000 முதல் ரூ.12,000 வரை கூடுதல் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர் விரும்பினால் இந்த கூடுதல் ஆக்சஸெரீஸ் பேக்கேஜை வாங்கிக் கொள்ளலாம்.

என்னென்ன ஸ்பெஷல்?
யுஎஸ்பி, புளூடூத் இணைப்பு வசதிகளுடன் கூடிய ஆடியோ சிஸ்டம், ரிட்ஸ் பிராண்டு பொறிக்கப்பட்ட லெதர் சீட் கவர்கள், ரியர் பார்க்கிங் சென்சார், ஸ்டீயரிங் வீல் கவர், பம்பர் புரொடெக்டர், டோர் சில் கார்டுகள், ரியர் பார்சல் டிரே ஆகியவை கூடுதல் அம்சங்களாக இருக்கும்.

இன்னும் ஸ்பெஷல் என்ன?
பாடி கிராஃபிக்ஸ் ஸ்டிக்கர், மட் பிளாப்புகள், 6 ஸ்பீக்கர்கள், டோர் வைசர்கள் மற்றும் மிதியடிகளும் லிமிடேட் எடிசன் பேக்கேஜில் கிடைக்கும் என மாருதி தெரிவித்துள்ளது. இந்த கூடுதல் பேக்கேஜை பாதிக்கு பாதி சலுகை விலையில் மாருதி வழங்குகிறது.


Click it and Unblock the Notifications








