லிமிடேட் எடிசன் ஸ்விப்ட் கார்: மாருதி அறிமுகம்
உலக அளவில் 30 லட்சம் ஸ்விப்ட் கார்களை சுஸூகி நிறுவனம் விற்பனை செய்துள்ளதை ஏற்கனவே தெரிவித்திருந்தோம். இதனை கொண்டாடும் விதமாக கூடுதல் ஆக்சஸெரீஸ்களுடன் புதிய ஸ்விப்ட் ஸ்டார் என்ற லிமிடேட் எடிசன் மாடலை அறிமுகம் செய்துள்ளது மாருதி.
ஜப்பானிய நிறுவனமான சுஸுகியின் ஸ்விப்ட் ஹேட்ச்பேக் கார் உலக அளவில் பெரிதும் விரும்பப்படும் மாடலாக இருக்கிறது. கடந்த 2004ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஸ்விப்ட் தற்போது 120 நாடுகளில் விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த ஆண்டு இந்தியாவின் அதிகம் விற்பனையான கார் மாடல் கூட ஸ்விப்ட்தான். உலக அளவில் விற்பனை செய்யப்பட்ட ஸ்விப்ட் கார்களில் மொத்தத்தில் 45 சதவீதம்(1.35 மில்லியன்) இந்தியாவில்தான் விற்பனையாகி இருக்கிறது.
இந்த நிலையில், ஸ்விப்ட் விற்பனை 3 மில்லியன் என்ற புதிய மைல்கல்லை எட்டியிருப்பதை கொண்டாடும் விதமாக புதிய லிமிடேட் எடிசன் ஸ்விப்ட் காரை மாருதி அறிமுகம் செய்துள்ளது.
ஸ்விப்ட் ஸ்டார் என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த புதிய ஸ்விப்ட் காரில் புளூடூத் இணைப்பு வசதி கொண்ட டபுள் டின் மியூசிக் சிஸ்டம், லெதர் சீட் கவர், ரியர் ரூஃப் ஸ்பாய்லர், ஒரு ஜோடி ஸ்பீக்கர்கள், ஸ்டீயரிங் வீல் கவர் மற்றும் டிசைனர் மேட் உள்ளிட்டவை கூடுதல் ஆக்சஸெரீஸ்களாக கிடைக்கும். ஆனால், லிமிடேட் எடிசன் ஸ்விப்ட் காரின் விலை விபரத்தை மாருதி இதுவரை வெளியிடவில்லை.


Click it and Unblock the Notifications








