முன்பதிவுக்கு முந்துங்கள்... வந்துவிட்டது ஸ்விப்ட் ஆர்எஸ்!!
ஸ்போர்ட்ஸ் பேக்கேஜுடன் கூடிய லிமிடேட் எடிசன் மாருதி ஸ்விப்ட் கார் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இது குறுகிய கால மாடலாக விற்பனை செய்யப்பட இருப்பதாக மாருதி தெரிவித்துள்ளது.
ராலி ஸ்போர்ட் கான்செப்ட்டை மனதில் வைத்து ஸ்விப்ட் ஆர்எஸ் என்ற பெயரில் படு ஸ்மார்ட்டாகவும், ஸ்போர்ட்டியாகவும் மாற்றும் வகையிலான கூடுதல் ஆக்சஸெரீஸ்களுடன் புதிய ஸ்விப்ட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஸ்விப்ட் ஆர்எஸ் காரின் கூடுதல் அம்சங்கள் என்னென்ன ?என்பது குறித்து ஸ்லைடரில் காணலாம்.

3 பீஸ் பாடி கிட்
ஸ்விப்ட் ஆர்எஸ் காருக்கு முன்பக்க, பின்பக்க எக்ஸ்ட்ரா பம்பர், ரியர் ஸ்பாய்லர் அடங்கிய 3 பீஸ் பாடி கிட் கொண்டதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

கிராஃபிக்ஸ் டிசைன் ஸ்டிக்கர்
ரேஸ் கார்களில் அதிகம் பயன்படுத்தப்படும் நீலம் மற்றும் கருப்பு நிறங்களில் பாடி கிராஃபிக்ஸ் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

வீல் கவர்
முதன்முறையாக கருப்பு நிற வீல்கவர்களுடன் இந்த கார் வந்துள்ளது.

ரியர் வியூ மிரர்
ஓஆர்விஎம் எனப்படும் ரியர் வியூ மிரர்களின் பின்புறம் பாதியளவுக்கு நீல நிற வண்ணம் கொண்டுள்ளது.

ஸ்பெஷல் பேட்ஜ்
டோர் சில் மற்றும் 4 கதவுகளிலும் ஸ்விப்ட் ஸ்பெஷல் எடிசனை குறிக்கும் வகையில் பெயர் பொறிக்கப்பட்டிருக்கிறது.

இன்டிரியர்
நீலம் மற்றும் கருப்பு வண்ண கலவை கொண்ட லெதர் அப்ஹோல்ஸ்டரியுடன் அசத்துகிறது இன்டிரியர். ஸ்பெஷல் எடிசன் ஸ்விப்ட் ஆர்எஸ் பெயரும் அப்ஹோல்ஸ்டரி, மிதியடிகளிலும் கொண்டுள்ளது.

சிடி பிளேயர்
இந்த ஸ்பெஷல் எடிசன் ஸ்விப்ட் காரில் உயர்ரக சிடி பிளேயர் பொருத்தப்பட்டிருக்கிறது. இது ஆக்ஸ் போர்ட் மற்றும் யுஎஸ்பி போர்ட் வசதி கொண்டது.

வேரியண்ட்கள்
விஎக்ஸ்ஐ பெட்ரோல் வேரியண்ட்டிலும், விடிஐ டீசல் வேரியண்ட்டிலும் மட்டுமே இந்த ஸ்போர்ட் பேக்கேஜ் கிடைக்கும்.

விலை
இத்துனை அம்சங்களுடன் கூடிய ஸ்விப்ட் ஆர்எஸ் காருக்கான பேக்கேஜ் வெறும் ரூ.24,500 என்ற விலையில் மாருதி வழங்குகிறது.


Click it and Unblock the Notifications








