ஸ்விப்ட், டிசையருக்கு 100 லிட்டர் டீசல் ஃப்ரீ: மாருதி ஆஃபர்!
ஸ்விப்ட் உள்ளிட்ட 4 டீசல் கார்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு அதிரடி சலுகைகளை மாருதி அறிவித்துள்ளது.
கார் மார்க்கெட் படு மந்தமாக இருந்து வருகிறது. இதனால், வாடிக்கையாளர்களை கவர்வதற்காக கார் நிறுவனங்கள் தொடர்ந்து சலுகைகளை அறிவித்து வருகின்றன. நாட்டின் முன்னணி கார் தயாரிப்பாளரான மாருதியும் தொடர்ந்து சலுகைகளை அறிவித்து வருகிறது. மந்தநிலை மட்டுமின்றி மாருதிக்கு தற்போது கடும் போட்டியும் இருந்து வருகிறது.

எனவே, டீசல் கார்களுக்கும் தற்போது சலுகைகளை வழங்கி வருகிறது. விற்பனையில் முன்னிலை வகித்து வரும் ஸ்விப்ட், டிசையர், ரிட்ஸ், எர்டிகா டீசல் கார்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு 100 லிட்டர் டீசல் இலவசமாக வழங்கப்படும் என மாருதி தெரிவித்துள்ளது. மேலும், ரூ.20,000 எக்ஸ்சேஞ்ச் போனஸும் பெறலாம் என மாருதி தெரிவித்துள்ளது.
இந்த 4 கார்களிலும் ஃபியட்டின் 1.3 லிட்டர் மல்டிஜெட் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. ஸ்விப்ட், டிசையர், ரிட்ஸ் கார்களின் எஞ்சின் 75 பிஎஸ் பவரையும், எர்டிகாவின் எஞ்சின் 90 பிஎஸ் பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்டது.


Click it and Unblock the Notifications








