ஆல்ட்டோ, ஸ்விப்ட், டிசையருக்கு 0% வட்டியில் கடன் திட்டம்!

கடந்த 12 ஆண்டுகளில் இல்லாத அளவு கார் விற்பனை சரிந்துள்ளது. இதனால், விழி பிதுங்கி இருக்கும் கார் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை தம் பக்கம் இழுக்க கார்களுக்கு போட்டி போட்டுக் கொண்டு சலுகைகளை அறிவித்து வருகின்றன.
நாட்டின் அதிகம் விற்பனையாகும் கார் மாடல்களான ஆல்ட்டோ, ஸ்விப்ட், டிசையர் ஆகிய கார்களுக்கு மாருதி இதுவரை சலுகைகளை அதிகம் வழங்காமல் இருந்து வந்தது. ஆனால், போகிற போக்கை பார்த்தால் சிக்கலாகிவிடும் என்று கருதி தற்போது அடுத்தடுத்து சலுகைகளை வழங்கத் துவங்கியுள்ளது.
ஸ்விப்ட், ஆல்ட்டோ கார்களுக்கு சலுகைகள் வழங்கப்படுவதை ஏற்கனவே தெரிவித்திருந்தோம். இந்த நிலையில், ஆல்ட்டோ, ஸ்விப்ட், டிசையர் கார்களுக்கு 0% கடன் திட்டத்தை அறிமுகப்படுத்த மாருதி திட்டமிட்டுள்ளது. இது வாடிக்கையாளர்களை பெரிதும் கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கடன் திட்டம் தவிர சலுகைகளையும் வழங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications