அடுத்தடுத்து 4 புதிய எஸ்யூவி கார்களை களமிறக்கும் மாருதி!

எர்டிகா மூலம் யுட்டிலிட்டி மார்க்கெட்டில் நல்ல இடத்தை பிடித்திருக்கிறது மாருதி.மேலும், சிறிய கார் மார்க்கெட் போன்றே வேகமாக வளர்ந்து வரும் யுட்டிலிட்டி மார்க்கெட்டிலும் தன்னை வலுப்படுத்திக் கொள்ளும் விதமாக இந்த புதிய மாடல்களை மாருதி அறிமுகம் செய்ய இருக்கிறது.
ஐரோப்பிய மார்க்கெட்டில் விற்பனை செய்யப்பட்டு வரும் எஸ்எக்ஸ்4 ஹேட்ச்பேக் காரின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்ட எஸ் கிராஸ் என்ற புதிய எஸ்யூவியை மாருதி சமீபத்தில் பார்வைக்கு அறிமுகம் செய்தது.
இந்த எஸ்யூவியும் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வர மாருதி முடிவு செய்துள்ளது. இதேபோன்று, கடந்த ஆண்டு டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த எக்ஸ்ஏ ஆல்ஃபா மினி எஸ்யூவியையும் விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது.
மூன்றாவது மாடலாக கிராண்ட் விட்டாரா அடிப்படையில் வடிவமைக்கப்பட்ட புதிய எஸ்யூவியை மாருதி அறிமுகப்படுத்த உள்ளது. இந்த எஸ்யூவி 4 மீட்டருக்கும் குறைவான நீளம் கொண்டதாக இருக்கும்.
இதுதவிர, ஸ்விப்ட் டிசையர் காரின் அடிப்படையில் வடிவமைக்கப்படும் புதிய எஸ்யூவியையும் நம் நாட்டு மார்க்கெட்டில் மாருதி அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த புதிய எஸ்யூவி மாடல்கள் மூலம் சிறிய மார்க்கெட் போன்றே யுட்டிலிட்டி ரக கார் செக்மென்ட்டிலும் வலுவான இடத்தை பெற மாருதி கணக்கு போட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








