ஆல்ட்டோ 800 முதலாண்டு கொண்டாட்டம்: ஸ்பெஷல் எடிசன் அறிமுகம்

ஆல்ட்டோ 800 கார் விற்பனைக்கு வந்து ஓர் ஆண்டுகள் நிறைவு பெற இருப்பதையொட்டி, கூடுதல் வசதிகளுடன் ஸ்பெஷல் எடிசன் மாடல் விற்பனைக்கு விடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் 16ந் தேதி ஆல்ட்டோ 800 கார் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது.

விற்பனையில் மாருதிக்கு முக்கிய மாடலாக விளங்கும் இந்த கார் பட்ஜெட் வாடிக்கையாளர்களின் சிறந்த தேர்வாக இருந்து வருகிறது. இந்த நிலையில், கூடுதல் அம்சங்களுடன் ஸ்பெஷல் ஆல்ட்டோ 800 வந்துள்ளது. ஸ்பெஷல் எடிசன் மாடலில் இடம்பெற்றிருக்கும் அம்சங்கள் குறித்த தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

ஒரே வேரியண்ட்

ஒரே வேரியண்ட்

எல்எக்ஸ்ஐ வேரியண்ட்டில் மட்டும் புதிய ஸ்பெஷல் எடிசன் மாடல் கிடைக்கும்.

விலை விபரம்

விலை விபரம்

சாதாரண எல்எக்ஸ்ஐ மாடல் ரூ.2.99 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் விற்கப்படும் நிலையில், புதிய ஆல்ட்டோ 800 ஸ்பெஷல் எடிசன் மாடல் ரூ.3.12 லட்சம் விலையில் கிடைக்கும். இந்த கூடுதல் தொகைக்கு சேர்க்கப்பட்டிருக்கும் கூடுதல் அம்சங்களை அடுத்த ஸ்லைடில் காணலாம்.

கூடுதல் அம்சங்கள்

கூடுதல் அம்சங்கள்

எல்எக்ஸ்ஐ வேரியண்ட் ஸ்பெஷல் எடிசனில் காண்போரை கவர்ந்திழுக்கும் பாடி கிராஃபிக்ஸ் ஸ்டிக்கர், புதிய ஃபேப்ரிக் சீட் கவர்கள், கருப்பு பெயின்ட் செய்யப்பட்ட பி பில்லர், பக்கவாட்டில் ஸ்ராட்ச் கார்டு, ரியர் பார்சல் டிரே, பாடி கலர் விங் கண்ணாடிகள், ஆப்ஷனலாக ஆடியோ சிஸ்டம் ஆகியவை கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளன.

எஞ்சின்

எஞ்சின்

ஆல்ட்டோ 800 காரில் 46 எச்பி ஆற்றலையும், 69 என்எம் டார்க்கையும் அளிக்கும் 796சிசி திறன் கொண்ட எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் இணைந்து செயல்புரிகிறது.

 சேமிப்பு சலுகைகள்

சேமிப்பு சலுகைகள்

மாருதி ஆல்ட்டோவுக்கு சில டீலர்களில் ரூ.20,000 வரை எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் சிறப்பு தள்ளுபடி சலுகைகள் வழங்கப்படுகின்றன. கூடுதல் தகவல்களுக்கு அருகிலுள்ள மாருதி டீலரை அணுகுங்கள்.

More from DriveSpark

Article Published On: Monday, October 7, 2013, 11:42 [IST]
English summary
Maruti Suzuki's high selling selling model, Alto is available in two special edition variants this festive season. Just last week the automaker came out with a limited edition model, Alto K10 Musik Edition. It has followed it up this week with an Anniversary Edition of the Alto 800. It was during last year's festive season that Maruti Suzuki launched the extensively facelifted and improved Alto 800.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+