மாருதி ஆல்ட்டோ 800 காரின் விஎக்ஸ்ஐ வேரியண்ட் அறிமுகம்
ஏராளமான நிரந்தரமான கூடுதல் வசதிகளுடன் மாருதி ஆல்ட்டோ-800 காரின் புதிய விஎக்ஸ்ஐ வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஆல்ட்டோ 800 விஎக்ஸ்ஐ வேரியண்ட்டில் சென்ட்ரல் லாக்கிங், அனைத்து கதவுகளிலும் பவர் விண்டோஸ், ரியர் ஸ்பாய்லர், கதவுகளை மூடும்போது பாதுகாப்பு தரும் டோர் மோல்டிங் எனப்படும் ரப்பர் இன்சுலேஷன், ஃபுல் வீல் கவர்கள் ஆகியவை கிடைக்கும்.

இதேபோன்று, 4 ஸ்டீரியோ ஸ்பீக்கர்களுடன் கூடிய மியூசிக் சிஸ்டம், டிரைவர் சைடு ஏர்பேக் மற்றும் இடதுபக்க ரியர் வியூ மிரர் ஆகியவை தற்போது கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளன.
இத்தனை அம்சங்களுடன் கூடிய விஎக்ஸ்ஐ வேரியண்ட்டுக்கு ரூ.15,000 மட்டுமே கூடுதல் விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எல்எக்ஸ்ஐ வேரியண்ட் ரூ.3.21 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படும் நிலையில், தற்போது விஎக்ஸ்ஐ வேரியண்ட் ரூ.3.36 லட்சம் விலையில் விற்பனைக்கு வந்துள்ளது.
மாருதி ஆல்ட்டோ 800 காரில் 46 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 796சிசி பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது.


Click it and Unblock the Notifications








