சிஎன்ஜியில் இயங்கும் மாருதி செலிரியோ விற்பனைக்கு வந்தது!
சிஎன்ஜியில் இயங்கும் மாருதி செலிரியோ இன்று விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. எரிவாயு கிடைக்கும் சில மாநிலங்களில் இந்த மாடல் விற்பனைக்கு கிடைக்கும்.
இது அதிக எரிபொருள் சிக்கனம் கொண்ட மாடல் என்பதால் வாடிக்கையாளர்களிடம் வரவேற்பு கிடைக்கும் என மாருதி எதிர்பார்க்கிறது.

வேரியண்ட்
செலிரியோவின் விஎக்ஸ்ஐ வேரியண்ட்டில் மட்டும் சிஎன்ஜியில் இயங்கும் மாடல் கிடைக்கும். செலிரியோ க்ரீன் என்ற பெயரில் இந்த மாடல் கிடைக்கும்.

காப்புரிமை தொழில்நுட்பம்
எஞ்சினுக்கு பெட்ரோல் மற்றும் எரிவாயு அனுப்புவதை கட்டுப்படுத்தும் மாருதியின் காப்புரிமை பெற்ற ஐஜிபிஐ தொழில்நுட்பத்துடன் வந்துள்ளது.

எஞ்சின்
செலிரியோவில் இருக்கும் 1.0 லிட்டர் கே- நெக்ஸ்ட் எஞ்சின் அதிகபட்சம் 68 எச்பி பவரை அளிக்கும். 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனில் மட்டும் கிடைக்கும். ஆட்டோமேட்டட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் மாடல் இல்லை.

மைலேஜ்
பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 23.1 கிமீ மைலேஜ் தரும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், சிஎன்ஜி மாடல் கணக்கீடுகளின்படி லிட்டர்/கிலோவுக்கு 31.79 கிமீ மைலேஜ் தரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விலை
ரூ.4.68 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு கிடைக்கும். அடுத்த ஆண்டு செலிரியோவில் டீசல் மாடல் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications








