ரூ.3.92 லட்சத்தில் லிமிடேட் எடிசன் எஸ்டீலோ: மாருதி அறிமுகம்

என்லைவ் என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் இந்த காரில் வெளிப்புறம் மற்றும் உட்புறத்தில் வாடிக்கையாளர்களை கவரும் அம்சங்களுடன் வந்துள்ளது.
வெளிப்புறத்தில் கிராபிக்ஸ் டிசைன் ஸ்டிக்கர்கள், வீல் கவர்கள் ஆகியவை கூடுதல் அம்சங்களாக இருக்கின்றன. உட்புறத்தில் லெதர் இருக்கைகள், யுஎஸ்பி இணைப்புடன் கூடிய டபுள் டின் ஆடியோ சிஸ்டம், இரட்டை வண்ணக் கலவை கொண்ட இன்டிரியர், மற்றும் பீஜ் பார்சல் டிரே ஆகியவை கூடுதலாக கொடுக்கப்பட்டுள்ளது.
லிமிடேட் எடிசனில் கொடுக்கப்பட்டிருக்கும் கூடுதல் ஆக்சஸெரீஸ்களின் மதிப்பு ரூ.23,000 ஆகிறது. ஆனால், மாருதி இந்த அனைத்து ஆக்சஸெரீஸ்களுக்கும் சேர்த்து ரூ.8,000 தள்ளுபடியுடன் ரூ.15,000 மட்டுமே கூடுதல் விலை நிர்ணயித்துள்ளது.
தற்போது மாருதி எஸ்டீலோ லிமிடேட் எடிசன் ரூ.3.92 லட்சம் ஆரம்ப விலையில் கிடைக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது. எஸ்டீலோவில் 998சிசி கே10பி எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. மேலும், லிட்டருக்கு 19 கிமீ மைலேஜ் தருமென அராய் சான்று கூறுகிறது.


Click it and Unblock the Notifications








