மாருதி ரிட்ஸ் காரின் ஸ்பெஷல் எடிசன் மாடல் அறிமுகம் - விபரம்!
கூடுதல் சிறப்பம்சங்களுடன் மாருதி ரிட்ஸ் காரின் சிறப்புப் பதிப்பு மாடல் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. ரிட்ஸ் எலேட் எடிசன் என்ற பெயரில் வந்திருக்கும் இந்த புதிய மாடல் பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களில் கிடைக்கும்.
விலை விபரம் இதுவரை அறிவிக்கப்படவில்லை. ஆனால், ரூ.30,000 முதல் ரூ.40,000 வரை கூடுதல் விலையில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கூடுதல் ஆக்சஸெரீஸ்கள் விபரம்
ஸ்பீக்கர்களுன் கூடிய 2 டின் ஆடியோ சிஸ்டம்
ஸ்பெஷல் சீட் கவர்கள்
புளுடூத் ஸ்டீரியோ மற்றும் டெலிபோன் கிட்
ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்
பாடி கிராஃபிக்ஸ் ஸ்டிக்கர்
கதவுகளுக்கான வைசர்கள்
தரை விரிப்புகள்
பன்முக பயன்பாட்டு பை
ஆம்பியன்ட் விளக்குகள்
நெக் குஷன்கள்
ஸ்டீயரிங் வீல் கவர்
மட் பிளாப்புகள்
உள்ளிட்ட 12 கூடுதல் ஆக்சஸெரீஸ்களுடன் புதிய ரிடிஸ் எலேட் எடிசன் விற்பனைக்கு வருகிறது. ரிட்ஸ் காரின் பெட்ரோல் மாடலில் 1.2 லிட்டர் கே சீரிஸ் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இது 85 பிஎச்பி சக்தியையும், 113 என்எம் டார்க்கையும் அளிக்கும்.
டீசல் மாடலில் 1.3 லிட்டர் மல்டிஜெட் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 75 பிஎச்பி ஆற்றலையும், 190 என்எம் டார்க்கையும் வழங்கும். இரண்டிலும் 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் கொண்டதாக கிடைக்கிறது. பெட்ரோல் மாடலில் 4 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷனலாக கிடைக்கிறது.
மாருதி ரிட்ஸ் காருக்கு ரூ.65,000 வரையில் தள்ளுபடி சலுகைகள் தற்போது பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது. ரூ.35,000 எக்ஸ்சேஞ்ச் போனசாகவும், ரூ.30,000 பணத் தள்ளுபடியாகவும், பெற்றுக் கொள்ளலாம்,.


Click it and Unblock the Notifications








