லிட்டருக்கு 33 கிமீ மைலேஜ் தரும் ஏ-ஸ்டாரை களமிறக்கும் மாருதி!
ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 33 கிலோமீட்டர் மைலேஜ் தரும் அடுத்த தலைமுறை ஏ-ஸ்டார் காரை அறிமுகப்படுத்த மாருதி திட்டமிட்டுள்ளது.
ஏ-ஸ்டார் ஈக்கோ என்ற பெயரில் விற்பனைக்கு வர இருக்கும் இந்த புதிய கார் அதிக மைலேஜ் தருவதற்காக பலவிதமான மாறுதல்களை கண்டுள்ளது.

தற்போது விற்பனை செய்யப்படும் ஏ-ஸ்டாரை விட இந்த கார் 20 கிலோ எடை குறைந்திருக்கிறது. மேலும், பிரேக் ஆற்றலை சேமித்து கூடுதல் ஆற்றலாக மாற்றும் தொழில்நுட்பம், ஸ்டார்ட் ஸ்டாப் தொழில்நுட்பம் உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்களை இந்த கார் கொண்டிருக்கும்.
இதன் மூலம், லிட்டருக்கு 33 கிலோமீட்டர் வரை மைலேஜ் தருமாம். மேலும், தற்போதைய மாடலைவிட புதிய மாடல் விலை அதிகமாக நிர்ணயிக்கப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதிய ஏ-ஸ்டார் ஏ+ செக்மென்ட்டில் நிலைநிறுத்த மாருதி முடிவு செய்து வைத்துள்ளது. இதனிடையே, புதிய 800 சிசி டீசல் எஞ்சினை இந்த காரிலும் பொருத்தி அறிமுகம் செய்யவும் மாருதி திட்டமிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








