மாருதி எர்டிகா லிமிடேட் எடிசன் மாடலும் விற்பனைக்கு வந்தது!
ரிட்ஸ் காரைத் தொடர்ந்து எர்டிகா காரின் லிமிடேட் எடிசன் மாடலையும் மாருதி விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.
உள்நாட்டு விற்பனையில் 1.50 லட்சம் என்ற புதிய மைல்கல்லை எர்டிகா தொட்டிருக்கிறது. இதனை கொண்டாடும் விதத்தில் இந்த புதிய லிமிடேட் எடிசன் மாடலை அறிமுகம் செய்துள்ளதாக மாருதி தெரிவித்துள்ளது. இது குறுகிய காலத்திற்கு மட்டும் விற்பனைக்கு கிடைக்கும் என மாருதி தெரிவித்துள்ளது.

சுப்பிரீயர் ஒயிட் மற்றும் சில்க்கி சில்வர் ஆகிய இரண்டு புதிய வண்ணங்களில் இந்த லிமிடேட் எடிசன் எர்டிகா வந்துள்ளது. குரோம் பினிஷ் செய்யப்பட்ட முகப்பு கிரில், ஸ்பாய்லர், பாடி கிராஃபிக்ஸ், டீகெல்ஸ் கொண்டதாக எர்டிகா லிமிடேட் எடிசன் கிடைக்கும்.
பெட்ரோல், டீசல் மற்றும் சிஎன்ஜி ஆகிய மூன்று மாடல்களிலும் இந்த லிமிடேட் எடிசன் மாடல் கிடைக்கும். பெட்ரோல் மாடல் ரூ.6.76 லட்சம் விலையிலும், சிஎன்ஜியில் இயங்கும் மாடல் ரூ.7.34 லட்சம் விலையிலும், டீசல் மாடல் ரூ.8.05 லட்சம் விலையிலும் விற்பனைக்கு கிடைக்கும். அனைத்தும் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையை அடிப்படையாகக் கொண்டது.


Click it and Unblock the Notifications








