மாருதி டிசையரின் ஸ்பெஷல் எடிசன் மாடல் அறிமுகம்! - விபரம்

By Saravana

விற்பனையில் சாதித்து வரும் மாருதி டிசையருக்கு கூடுதல் வலு சேர்க்கும் விதத்தில் ஸ்பெஷல் எடிசன் மாடல் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

மாருதி டிசையர் எல்டிஐஎக்ஸ்(LDiX) என்ற பெயரில் இந்த புதிய மாடல் விற்பனைக்கு கிடைக்கும். அதாவது, டீசல் பேஸ் வேரியண்ட்டாக விற்பனை செய்யப்பட்டு வரும் எல்டிஐ வேரியண்ட்டில்தான் கூடுதல் வசதிகளை சேர்த்து தற்போது ஸ்பெஷல் எடிசன் மாடலாக வெளியிடப்பட்டிருக்கிறது.

Maruti Suzuki Dzire

பவர் விண்டோஸ், ரிமோட் சென்ட்ரல் லாக்கிங், ட்விட்டர் மற்றும் ஸ்பீக்கர்களுடன் கூடிய 2 டின் ஆடியோ சிஸ்டம், சன் வைசர், இண்டிகேட்டர்கள் மற்றும் பாடி கலரிலான ரியர் வியூ கண்ணாடிகள், பனி விளக்குகள் போன்ற 12 கூடுதல் ஆக்சஸெரீஸ்களுடன் இந்த ஸ்பெஷல் எடிசன் மாடல் கிடைக்கும்.

தற்போது விற்பனையில் இருக்கும் விடிஐ டீசல் வேரியண்ட்டுக்கு இணையான வசதிகள் இந்த புதிய வேரியண்ட்டில் உள்ளன. ரூ.6.49 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் சாதாரண எல்டிஐ வேரியண்ட் விற்பனை செய்யப்படுகிறது.

ஸ்பெஷல் எடிசன் மாடல் ரூ.6.86 லட்சம் விலையில் கிடைக்கும். விடிஐ வேரியண்ட் ரூ.7.53 லட்சம் விலையில் விற்பனை செய்யப்படும் நிலையில், அதற்கு இணையான வசதிகள் கொண்ட இந்த மாடல் எல்டிஐஎக்ஸ் வேரியண்ட் குறைவான விலையில் கிடைக்கும் என்பதால், வாடிக்கையாளர்களுக்கு பெரிய அளவில் சேமிப்பு கிடைக்கும் என்று மாருதி தெரிவிக்கிறது.

இதுதவிர, 2013ம் ஆண்டு மாருதி டிசையர் கார்களுக்கு சிறப்பு தல்ளுபடிகளும், 2014ம் ஆண்டு மாடல் டிசையர் கார்களுக்கு ரூ.15,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் ரூ.1,500 கார்ப்பரேட் டிஸ்கவுண்ட் வழங்கப்படும் என்று மாருதி தெரிவித்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Saturday, March 8, 2014, 13:15 [IST]
English summary
Maruti Suzuki has launched yet another special edition model. This one is for the Swift DZire compact sedan. To be specific, the special edition is limited to the base diesel LDi variant and is thus named Maruti Swift Dzire LDiX.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+