புதிய மாருதி எஸ்எக்ஸ்-4 செடான் கார் - படங்களுடன் விபரங்கள்!
அடுத்த சில மாதங்களில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் மேம்படுத்தப்பட்ட எஸ்எக்ஸ்4 காரின் ஸ்பை ஷாட்ஸ் படங்கள் இணையதளங்களில் வெளியாகியிருக்கின்றன. மோட்டார்பாஷ் ஆட்டோமொபைல் இணையதளத்தில் இந்த படங்கள் முதன்முறையாக வெளியிடப்பட்டுள்ளன. படங்களில் இருக்கும் எஸ்எக்ஸ்4 கார் உற்பத்தி நிலை எட்டிய காராக இருக்கிறது.
புதிய எஸ்எக்ஸ்4 கார் 10 வேரியண்ட்களில் விற்பனைக்கு வர இருக்கிறது. ரூ.7.64 லட்சம் முதல் ரூ.8.27 லட்சம் விலைகளில் புதிய எஸ்எக்ஸ்4 விற்பனைக்கு வர இருக்கிறது. பெட்ரோல், டீசல் மற்றும் சிஎன்ஜி மாடல்களில் கிடைக்கும்.

ஓப்பீட்டுக்காக...
இடது புறத்தில் தற்போதைய மாடலும், வலது புறத்தில் புதிய எஸ்எக்ஸ்4 காரும் நிற்கிறது.

முக்கிய மாற்றம்
முகப்பில் ஹனிகோம்ப் கிரில்லுக்கு பதிலாக குரோம் பட்டைகளுடன் கூடிய கிரில்லுடன் புதிய எஸ்எக்ஸ்4 கார் மாற்றப்பட்டுள்ளது.

கவர்ச்சி
தற்போதைய மாடலைவிட முகப்பு மாற்றங்களை கண்டிருப்பதால் அதிக கவர்ச்சியாக உள்ளது. மேலும், இரண்டு புதிய வண்ணங்களில் மேம்படுத்தப்பட்ட எஸ்எக்ஸ்4 விற்பனைக்கு கிடைக்கும்.

இண்டிரியர்
உட்புறத்தில் இரட்டை வண்ணக் கலவையுடன் பினிஷிங் செய்யப்பட்டுள்ளது.

இன்போடெயின்மென்ட் சிஸ்டம்
இசட்எக்ஸ்ஐ டாப் பெட்ரோல் வேரியண்ட்டில் இன்பில்ட் சாட் நவ் நேவிகேஷன் சிஸ்டம் மற்றும் டச் ஸ்கிரீன் இன்போடெயின்மென்ட் சிஸ்டம் ஸ்டான்டர்டு ஆக்சஸெரீயாக இருக்கும்.

வுட் பினிஷிங்
இன்டிரியரில் ஃபாக்ஸ்வுட் மரபட்டை வேலைப்பாடுகள் மற்றும் குரோம் பினிஷிங்குடன் கூடுதல் பிரமியம் அந்தஸ்துடன் இருக்கும்.

பின்புற டிசைன்
பின்புற டிசைனில் மாற்றங்கள் இருக்காது.

எஞ்சின்
தற்போதைய மாடலில் இருக்கும் அதே 1.6 லிட்டர் விவிடி பெட்ரோல் எஞ்சின், 1.3 லிட்டர் டிடிஐஎஸ் டீசல் எஞ்சின்கள்தான் புதிய எஸ்எக்ஸ்4 காரிலும் பொருத்தப்பட்டிருக்கும். மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் மாடல்களில் கிடைக்கும்.

விலை ஒப்பீடு
தற்போது மாடலுக்கும், புதிய மாடலுக்குமான விலை ஒப்பீடை படத்தில் காணலாம்.


Click it and Unblock the Notifications








