ரூ.7.38 லட்சத்தில் மேம்படுத்தப்பட்ட மாருதியின் எஸ்எக்ஸ்4 அறிமுகம்!!
சத்தமில்லாமல் மேம்படுத்தப்பட்ட எஸ்எக்ஸ்4 செடான் காரை மாருதி அறிமுகம் செய்துள்ளது. ரூ.7.38 லட்சம் முதல் ரூ.9.79 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்கு விடப்பட்டுள்ளது. புதிய கிரில், டச் ஸ்கிரீன், ஆடியோ நேவிகேஷன், எலக்ட்ரிக்கல் போல்டபிள் ரியர் வியூ மிரர் உள்ளிட்டவை புதிய எஸ்எக்ஸ்4 காரில் கூடுதல் அம்சங்கள். 1.3 லிட்டர் சூப்பர் டர்போ டீசல் எஞ்சின் மற்றும் 1.6 லிட்டர் விவிடி பெட்ரோல் எஞ்சினுடன் விற்பனைக்கு கிடைக்கும்.
பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 16.51 கிமீ மைலேஜையும், டீசல் மாடல் லிட்டருக்கு 22.1 கிமீ மைலேஜையும் கொடுக்கும் என மாருதி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் வேரியண்ட்கள் ரூ.7.38 லட்சம் முதல் ரூ.8.84 லட்சம் வரையிலான விலையிலும், டீசல் வேரியண்ட்கள் ரூ.8.27 லட்சம் முதல் ரூ.9.79 லட்சம் வரையிலான விலையிலும் கிடைக்கும். கடந்த 2007ம் ஆண்டு விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட எஸ்எக்ஸ்4 செடான் கார் விற்பனையில் நல்ல பங்களிப்பை மாருதிக்கு வழங்கி வந்தது. 2011ல் இதன் டீசல் மாடல் அறிமுகமானது.

புதிய மாருதி எஸ்எக்ஸ்4 அறிமுகம்

புதிய மாருதி எஸ்எக்ஸ்4 அறிமுகம்

புதிய மாருதி எஸ்எக்ஸ்4 அறிமுகம்



Click it and Unblock the Notifications








