இந்தியாவில் பென்ஸ் இ63 ஏஎம்ஜி பவர்ஃபுல் செடான் கார் அறிமுகம்

மெர்சிடிஸ் பென்ஸ் இ கிளாஸ் காரின் பவர்ஃபுல் மாடலான இ63 ஏஎம்ஜி கார் நொய்டாவிலுள்ள புத் இன்டர்நேஷனல் சர்க்யூட்டில் நடந்த நிகழ்ச்சியில் சற்றுமுன் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா நிறுவனத்தின் தலைவர் எபெர்ஹார்டு கெர்ன் இந்த புதிய காரை பத்திரிக்கையாளர் முன்னிலையில் அறிமுகம் செய்தார்.

கடந்த மாதம் மேம்படுத்தப்பட்ட இ கிளாஸ் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டதன் தொடர்ச்சியாக அதன் பவர்ஃபுல் வெர்ஷனான இ63 ஏஎம்ஜி விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

 ஏஎம்ஜி கிட்

ஏஎம்ஜி கிட்

இ- கிளாஸ் காரைவிட ஏஎம்ஜி பாடி கிட்டுடன் வந்திருப்பதால் செடான் கார் போன்று மென்மையாக இல்லாமல் தோற்றத்தில் மிரட்டுகிறது. தாழ்வான ஏர் இன்டேக்குகள், இரட்டை பிளேடுகளின் நடுவில் பொருத்தப்பட்ட பென்ஸ் சின்னம் ஆகியவை கூடுதல் கம்பீரத்தை கொடுக்கின்றன. கரும்புகை பூச்சுடன் கூடிய ஹெட்லைட்டுகளும் மிரட்டுகின்றன.

எஞ்சின்

எஞ்சின்

இந்த காரில் 5.5 லிட்டர் வி8 எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த எஞ்சின் 557 பிஎச்பி சக்தியையும், 720 என்எம் டார்க்கையும் அளிக்கும். முந்தைய இ63 ஏஎம்ஜி மாடலைவிட இது 37 பிஎச்பி சக்தியை கூடுதலாக வெளிப்படுத்தும்.

டிரான்ஸ்மிஷன்

டிரான்ஸ்மிஷன்

இந்த காரில் ஏஎம்ஜி ஸ்பீட்ஷிப்ட் எம்சிடி 7ஜி டிரோனிக் டிரான்ஸ்மிஷன் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த டிரான்ஸ்மிஷன் எஞ்சின் சக்தியை அனைத்து சக்கரங்களுக்கும் கடத்தும்.

எஞ்சின் சிறப்பு

எஞ்சின் சிறப்பு

இந்த காரில் பொருத்தப்பட்டிருக்கும் எஞ்சின் எந்திரங்கள் உதவி அதிகம் இல்லாமல் கைகளால் ஒருங்கிணைக்கப்படுகிறது.

 டாப் ஸ்பீடு

டாப் ஸ்பீடு

மணிக்கு அதிகபட்சமாக 250கிமீ வேகத்தில் திறன் கொண்டது.

பெர்ஃபார்மென்ஸ்

பெர்ஃபார்மென்ஸ்

0-100 கிமீ வேகத்தை 4.2 வினாடிகளில் எட்டும் திறன் கொண்டது.

 மேம்படுத்திய கேபின்

மேம்படுத்திய கேபின்

பழைய காரைவிட கேபினுக்குள் அதிக மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதனால் கூடுதல் சொகுசை பயணிகள் உணர முடியும்.

விலை

விலை

இ - கிளாஸ் செடான் கார் ரூ.41.5 லட்சம் விலையில் விற்பனைக்கு வந்த நிலையில், அதன் பவர்ஃபுல் வெர்ஷனான இந்த கார் ரூ.1.29 கோடி விலையில் விற்பனைக்கு வந்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Thursday, July 25, 2013, 14:48 [IST]
English summary
German luxury car maker Mercedes-Benz has launched the much awaited E63 AMG car in India at Rs 1.29 crores (ex-showroom, Delhi). 
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+