ரூ.77.5 லட்சத்தில் ஸ்பெஷல் ஜிஎல் கிளாஸ் எஸ்யூவி: பென்ஸ் அறிமுகம்
ரூ.77.5 லட்சம் விலையில் மேம்படுத்தப்பட்ட புதிய ஜிஎல் கிளாஸ் சொகுசு எஸ்யூவியை மெர்சிடிஸ் பென்ஸ் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. டெல்லியிலுள்ள பென்ஸ் ஷோரூமில் நடந்த விழாவில் இந்த புதிய காரை பிரபல டென்னிஸ் வீரர் போரிஸ் பெக்கர் அறிமுகம் செய்து வைத்தார்.
மேலும், இந்த புதிய ஜிஎல் கிளாஸ் எஸ்யூவி லிமிடேட் எடிசனாக விற்பனை செய்யப்பட உள்ளது. மொத்தம் 100 கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட உள்ளது. தற்போது விற்பனையில் இருக்கும் காரைவிட 22 சதவீதம் கூடுதல் டார்க்கை வழங்கும் வகையிலும், 15 சதவீதம் குறைந்த கார்பன் புகையை வெளியிடும் வகையில் மேம்படுத்தப்பட்டிருக்கிறது.

புதிய ஜிஎல் 350சிடிஐ 4 மேட்டிக் காரில் பொருத்தப்பட்டிருக்கும் 3.0 லிட்டர் வி6 டீசல் எஞ்சின் 258 பிஎஸ் பவரையும், 620 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். ஈக்கோ ஸ்டார்ட்/ஸ்டாப் தொழில்நுட்பம் இருப்பதால் குறிப்பிட்ட வினாடிகள் கார் நின்றிருந்தால் எஞ்சின் தானாகவே அணைந்துவிடும். மீண்டும் ஆக்சிலேட்டரில் கால் வைத்து அழுத்தும்போது இயங்க ஆரம்பித்துவிடும்.
நாடு முழுவதும் உள்ள அனைத்து மெர்சிடிஸ் பென்ஸ் ஷோரூம்களிலும் புதிய ஜிஎல் கிளாஸ் எஸ்யூவி விற்பனைக்கு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரூ.77.5 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு வந்துள்ளது புதிய ஜிஎல் கிளாஸ் எஸ்யூவி.


Click it and Unblock the Notifications








