ரூ.1.49 கோடியில் புதிய பென்ஸ் எம்எல்63 ஏஎம்ஜி எஸ்யூவி அறிமுகம்!

ரூ.1.49 கோடி விலையில் புதிய மெர்சிடிஸ் பென்ஸ் எம்எல்63 எஸ்யூவியின் ஏஎம்ஜி மாடல் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. டெல்லியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஏஎம்ஜி பெர்ஃபார்மென்ஸ் மையத்தில் இந்த புதிய எஸ்யூவியின் அறிமுக விழா நடந்தது.

ஏஎம்ஜி பெர்ஃபார்மென்ஸ் மையம் வாடிக்கையாளர்களுக்கு புதுமையான அனுபவத்தை வழங்கும். உலக அளவில் 375வது ஏஎம்ஜி பெர்ஃபார்மென்ஸ் மையம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இன்று பெங்களூரில் ஏஎம்ஜி பெர்ஃபார்மென்ஸ் மையம் திறக்கப்பட்டது. இதுதவிர, மும்பையிலும் ஏஎம்ஜி பெர்ஃபார்மென்ஸ் மையம் விரைவில் திறக்கப்பட உள்ளது.


தோற்றம்

தோற்றம்

ஏஎம்ஜி பாடி கிட்டுடன் மிக கம்பீரமான தோற்றம் கொண்டுள்ளது. எல்இடி பகல்நேர ரன்னிங் விளக்குகள், 20 இஞ்ச் அலாய் வீல்கள் உள்ளிட்டவை வெளிப்புற தோற்றத்துக்கு கூடுதல் வலு சேர்க்கின்றன.

 இன்டிரியர்

இன்டிரியர்

எலக்ட்ரிக்கல் அட்ஜெஸ்ட் வசதியுடன் ஏஎம்ஜி ஸ்போர்ட்ஸ் இருக்கைகள், ஏஎம்ஜி டயல்கள், அல்கான்ட்ரா மற்றும் நப்பா லெதர் உறை போடப்பட்ட ஸ்டீயரிங் வீல், மூன்று வண்ணங்களில் ஆம்பியன்ட் லைட்டுகள் போன்றவை இன்டிரியரை அலங்கரிக்கின்றன. சென்டர் கன்சோலில் 203 செமீ டிஎஃப்டி திரை கொடுக்கப்பட்டுள்ளது. 830 வாட்ஸ் ஹார்மன் கார்டன் லாஜிக் 7 சர்ரவுண்ட் மியூசிக் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. 14 ஸ்பீக்கர்கள், ஹெட்போன்கள் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

எஞ்சின்

எஞ்சின்

இந்த சொகுசு எஸ்யூயிவில் 550 பிஎச்பி பவரையும், 760 என்எம் டார்க்கையும் அளிக்கும் 5,461 சிசி எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. ஏஎம்ஜி ஸ்பீடுஷிப்ட் 7ஜி ட்ரோனிக் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் 4 வீல்களுக்கும் பவரை கடத்துகிறது. 0- 100 கிமீ வேகத்தை 4.7 வினாடிகளில் எட்டிவிடும். மணிக்கு 250 கிமீ வேகம் வரை தொடும் திறன் கொண்டது.

 இதர அம்சங்கள்

இதர அம்சங்கள்

கம்ஃபர்ட், ஸ்போர்ட், ஸ்போர்ட் ப்ளஸ் ஆகிய மூன்று விதமாக மாற்றிக்கொள்ளும் வசதி கொண்ட சஸ்பென்ஷன் அமைப்பு, அதிக செயல்திறன் கொண்ட பிரேக் ஆகியவை டிரைவிங்கில் புதிய அனுபவத்தை கொடுக்கும் என பென்ஸ் தெரிவிக்கிறது.

 விலை

விலை

ரூ.1.49 கோடி டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. தற்போது விற்பனைக்கு வந்துள்ள எம்எல் 63 ஏஎம்ஜி எஸ்யூவி தவிர்த்து ஜி63 ஏஎம்ஜி, ஜிஎல்63 ஏஎம்ஜி ஆகிய மாடல்களும் இந்தியாவில் விற்பனைக்கு கிடைப்பது குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Friday, May 16, 2014, 11:22 [IST]
English summary
Mercedes-Benz today launched the ML 63 AMG in an event in Delhi. The launch event was held at the new AMG Performance Center - the first of its kind in India that was simultaneously inaugurated.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+