இந்தியாவில் மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் கிளாஸ் டீசல் விற்பனைக்கு வந்தது!

By Saravana

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் பிரபல சொகுசு கார் மாடலான எஸ் கிளாஸ் காரின் டீசல் மாடல் இந்தியாவில் இன்று விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. எஸ் 350 சிடிஐ என்ற வேரியண்ட்டில் வந்திருக்கும் இந்த புதிய டீசல் சொகுசு கார் புனேயில் நடந்த நிகழ்ச்சியில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

மிக சவாலான விலையில் பிற சொகுசு கார் மாடல்களுக்கு போட்டியை கொடுக்கும் வகையில் வந்துள்ளது. புனேயில் அசெம்பிள் செய்து விற்பனை செய்யப்பட இருக்கும் இந்த புதிய காரின் சிறப்பம்சங்களை ஸ்லைடரில் கொடுத்துள்ளோம்.


எஞ்சின் விபரம்

எஞ்சின் விபரம்

மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் 350சிடிஐ காரில் 3.0 லிட்டர் வி6 எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த எஞ்சின் 254 பவரையும், 620 என்எம் டார்க்கையும் அளிக்கும். 7 ஸ்பீடு டியூவல் கிளட்ச் டிரான்ஸ்மிஷன் கொண்டது.

 மைலேஜ்

மைலேஜ்

லிட்டருக்கு 16.6 கிமீ மைலேஜ் தரும் என்று நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. 0 -100 கிமீ வேகத்தை 6.8 வினாடிகளில் எட்டிவிடும் திறன் கொண்ட இந்த கார் மணிக்கு 250 கிமீ வேகத்தில் செல்லும் வகையில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

வசதிகள்

வசதிகள்

ஆம்பியன்ட் விளக்குகள், பின்புற பயணிகளுக்கான 10 இஞ்ச் திரைகள், வயர்லெஸ் ஹெட்போன்கள், ஹாட் ஸ்டோன் மசாஜ் இருக்கைகள் போன்ற சிறப்பு வசதிகள் உள்ளன. ஆனால், பெட்ரோல் மாடலான எஸ் 500 காரில் இருக்கும் பல வசதிகள் இந்த டீசல் மாடலில் கொடுக்கப்படவில்லை.

பாதுகாப்பு வசதிகள்

பாதுகாப்பு வசதிகள்

ஏர் சஸ்பென்ஷன், 8 ஏர்பேக்குகள், அடாப்டிவ் பிரேக் சிஸ்டம் ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் போன்ற பல பயன் தரும் பாதுகாப்பு வசதிகளை இந்த புதிய மாடல் கொண்டுள்ளது.

விலை விபரம்

விலை விபரம்

ரூ.1.07 கோடி புனே எக்ஸ்ஷோரூம் விலையிலும், ரூ.1.36 கோடி மும்பை எக்ஸ்ஷோரூம் விலையிலும் விற்பனைக்கு வந்துள்ளது. ஆடி ஏ8 காரின் 3.0 லிட்டர் எஞ்சின் மாடல், பிஎம்டபிள்யூ 730எல்டி மற்றும் ஜாகுவார் எக்ஸ்ஜே காரின் 3.0 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்ட மாடல்களுக்கு போட்டியை கொடுக்கும். எஸ் கிளாஸ் காரின் பெட்ரோல் மாடல் ஏற்கனவே விற்பனையில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

ரூ.1.07 கோடி புனே எக்ஸ்ஷோரூம் விலையிலும், ரூ.1.36 கோடி மும்பை எக்ஸ்ஷோரூம் விலையிலும் விற்பனைக்கு வந்துள்ளது. ஆடி ஏ8 காரின் 3.0 லிட்டர் எஞ்சின் மாடல், பிஎம்டபிள்யூ 730எல்டி மற்றும் ஜாகுவார் எக்ஸ்ஜே காரின் 3.0 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்ட மாடல்களுக்கு போட்டியை கொடுக்கும். எஸ் கிளாஸ் காரின் பெட்ரோல் மாடல் ஏற்கனவே விற்பனையில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Thursday, June 5, 2014, 16:09 [IST]
English summary
Mercedes-Benz India has launched diesel variant of its flagship vehicle, the S-Class. The S 350 CDI variant of the 2014 S-Class comes with a price tag of INR 1.07 crore in Pune, before taxes. Mercedes-Benz S 350 CDI is powered by a 3.0-litre V6 engine that develops 254 horsepower at 3,600 rpm and 620 Nm of torque between 1,600-2,400 rpm.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+