புழுதியை கிளப்பும் புதிய பென்ஸ் செடான் அறிமுகம்!

சொகுசு கார் மார்க்கெட்டில் சிறந்த செடான் என்று பெயரெடுத்த எஸ் கிளாஸ் காரின் 2014 மாடல் ஏஎம்ஜி வெர்ஷனை மெர்சிடிஸ் பென்ஸ் காரின் படங்கள் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த புதிய எஸ்63 ஏஎம்ஜி கார் முந்தைய மாடலைவிட அதிக சக்தி கொண்டதாக மாற்றம் கண்டுள்ளது.

இதுதவிர, பென்ஸ் நிறுவனத்தின் இலகு எடை தாத்பரியத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. தோற்றத்தில் எஸ் கிளாஸ் காரைவிட அதிக வித்தியாசங்கள் பார்வைக்கு தெரியாவிட்டாலும், ஏஎம்ஜி கிட் மற்றும் எஞ்சின் ஆகியவை மூலம் வேறுபடுகிறது.

 தோற்றம்

தோற்றம்

ஏர் ஸ்பிலிட்டர், சைடு ஸ்கர்ட், அலாய் வீல்கள் ஆகிய ஏஎம்ஜி கிட்டுகளால் புதிய எஸ்63 ஏஎம்ஜி கார் கூடுதல் கம்பீரம் கொண்டதாக தெரிகிறது.

 எஞ்சின்

எஞ்சின்

இந்த காரில் 5.5 லிட்டர் வி8 ட்வின் டர்போ எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த காரில் ஏஎம்ஜி ஸ்பீட்ஷிப்ட் எம்சிடி 7 ஸ்பீடு ஸ்போர்ட்ஸ் டிரான்ஸ்மிஷன் பொருத்தப்பட்டிருக்கிறது.

பவர்

பவர்

இந்த காரின் எஞ்சின் அதிகபட்சமாக 577 எச்பி பவரையும், 900 என்எம் டார்க்கையும் அளிக்கும். முந்தைய மாடலைவிட இது 49 எச்பி கூடுதல் என்பது குறிப்பிடத்தக்கது.

 எடை குறைவு

எடை குறைவு

முந்தைய மாடலைவிட இந்த புதிய மாடல் 100 கிலோ வரை எடை குறைவானது.

 எடை குறைப்பு சமாச்சாரம்

எடை குறைப்பு சமாச்சாரம்

இலகு எடை கொண்ட அலாய் வீல்கள், பிரேக்கிங் சிஸ்டம், லித்தியம் அயான் பேட்டரி, 4 மேட்டிக் ஆல் வீல் டிரைவ் சிஸ்டம், அலுமினியம் பாடி ஆகியவை இந்த காரின் எடை குறைப்புக்கு காரணங்களாகியுள்ளன. இதுதவிர, கார்பன் ஃபைபர் பாகங்களும் ஆங்காங்கே பயன்படுத்தப்பட்டுள்ளன.

உந்துசக்தி

உந்துசக்தி

எடை குறைந்ததால் 0-100 கிமீ வேகத்தை இந்த செடான் கார் வெறும் 4 வினாடிகளில் தொட்டுவிடும். 300 கிமீ வேகத்தை மிகாத வண்ணம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

சஸ்பென்ஷன்

சஸ்பென்ஷன்

இந்த காரில் ஏர்மேட்டிக் ஸ்போர்ட்ஸ் சஸ்பென்ஷன் பொருத்தப்பட்டிருக்கிறது. புதிய 16.5 இஞ்ச் விட்டம் கொண்ட கார்பன் செராமிக் டிஸ்க் பிரேக் முதன்முறையாக இந்த காரில் கொண்டு வரப்பட்டுள்ளது.

இன்டிரியர்

இன்டிரியர்

வாடிக்கையாளர்களின் விருப்பதிற்கு ஏற்றாற்போல் இன்டிரியரை தேர்வு செய்துகொள்ளும் வகையில் ஏராளமான ஆக்சஸெரீஸ்களுடன் கிடைக்கும்.

முதல் தரிசனம்

முதல் தரிசனம்

வரும் செப்டம்பரில் நடைபெற இருக்கும் பிராங்ஃபர்ட் ஆட்டோ ஷோவில் இந்த புதிய கார் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

Article Published On: Friday, July 19, 2013, 11:06 [IST]
English summary
The AMG version of the most luxurious Merc, the 2014 S Class has been revealed. However, when you take your first look at the new S63 AMG you will not notice the typical body adornments common to AMG tuned models. On the contrary, the S63 AMG almost as subtle as the regular S Class.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+