புதிய கன்வெர்ட்டிபிள் காரை விற்பனைக்கு விட்ட மெர்சிடிஸ் பென்ஸ்
மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்எல்கே 55 ஏஎம்ஜி கார் டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் சற்றுமுன் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. எஸ்எல்கே ரோட்ஸ்டெர் காரைவிட தோற்றத்தில் கூடுதல் கம்பீரத்துடன் இந்த கார் வந்துள்ளது.
கன்வெர்ட்டிபிள் ரகத்தில் மிகச்சிறந்த அழகையும், பவர்ஃபுல் எஞ்சினுடன் வந்திருக்கும் இந்த கார் இறக்குமதி செய்து விற்பனை செய்யப்பட உள்ளது. இந்த காரில் இடம்பெற்றிருக்கும் முக்கிய அம்சங்கள், வசதிகள் மற்றும் எஞ்சின் குறித்த கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

எஞ்சின்
புதிய எஸ்எல்கே 55 ஏஎம்ஜி காரில் 421 எச்பி ஆற்றலையும், 540 என்எம் டார்க்கையும் அளிக்கும் 5.5 லிட்டர் வி8 எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. 7-ஜி ட்ரோனிக் ப்ளஸ் 7 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் இணைந்து செயலாற்றுகிறது.

பெர்ஃபார்மென்ஸ்
0 - 100 கிமீ வேகத்தை வெறும் 4.6 வினாடிகளில் தொட்டுவிடும் இந்த கூரை இல்லாத கன்வெர்ட்டிபிள் ரக கார்.

டிரைவிங் ஆப்ஷன்கள்
எஃபிசியன்சி, ஸ்போர்ட் மற்றும் மேனுவல் என மூன்றுவிதமான டிரைவிங் ஆப்ஷன்களை இந்த கார் கொண்டிருக்கிறது. இந்த காரில் ஈக்கோ ஸ்டார்ட் ஸ்டாப் சிஸ்டமும் உள்ளது. மேலும், எஞ்சினிலிருந்து அதிக சக்தி தேவையில்லாத சமயங்களில், 2 சிலிண்டர்களை அணைத்து வைக்க முடியும்.

ஏஎம்ஜி கிட்
முன்பக்க பம்பர், ரியர் ஸ்கர்ட், ஏர் இன்டேக், குவாட் எக்சாஸ்ட், 18 அங்குல அலாய் வீல்கள் என பலவிதமான ஏஎம்ஜி பாடி கிட் ஆக்சஸெரீஸ்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன.

அம்சங்கள்
சூரிய வெளிச்சத்துக்கு தக்கவாறு மாறும் தன்மை கொண்ட கண்ணாடி கூரை, பை ஸினான் ஹெட்லைட், ஏஎம்ஜி டோர் சில்கள் உள்ளிட்ட ஏராளமான சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது.

சஸ்பென்ஷன்
ஏஎம்ஜி ஸ்போர்ட்ஸ் சஸ்பென்ஷன், ஏஎம்ஜி டைரக்ட் ஸ்டீயர் சிஸ்டம், ஏஎம்ஜி பெர்ஃபார்மென்ஸ் ஸ்டீயரிங் வீல் போன்ற அம்சங்களும் உள்ளன.

விலை
ரூ.1,25,90,000 டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் இந்த கார் விற்பனைக்கு வந்துள்ளது.


Click it and Unblock the Notifications








