மிட்சுபிஷி அட்ரேஜ் புதிய காம்பெக்ட் செடான் அறிமுகம்

By Saravana
Mitsubishi Attrage
புத்தம் புதிய காம்பெக்ட் செடான் காரின் உற்பத்தி நிலை மாடலின் படத்தை மிட்சுபிஷி வெளியிட்டுள்ளது. மிட்சுபிஷி அட்ரேஜ் என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த புதிய கார் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படும் வாய்ப்பு உள்ளதால் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ஹோண்டாவின் பிரியோ, அமேஸ் போன்றே இந்த காரும் மிட்சுபிஷியின் மிராஜ் ஹேட்ச்பேக் காரின் செடான் வெர்ஷனாக வருகிறது. இந்த காரில் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் மற்றும் சிவிடி ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் மாடல்களில் விற்பனைக்கு வரும் என தெரிகிறது.

இதுதவிர, மார்க்கெட்டை பொறுத்து 1.0 லிட்டர் எஞ்சினுடனும் இந்த காரை விற்பனைக்கு கொண்டு வருவதற்கு மிட்சுபிஷி திட்டமிட்டுள்ளது. இந்த கார் லிட்டருக்கு 26.3 கிமீ மைலேஜ் தரும் என கூறப்படுகிறது. ஆனால், சராசரியாக லிட்டருக்கு 18.7 கிமீ மைலேஜ் தருமாம். சிறந்த ஏரோடைனமிக்ஸ் கொண்டிருப்பதால் இந்த மைலேஜ் சாத்தியம் என மிட்சுபிஷி தரப்பு தெரிவிக்கிறது.

ஜூலை மாதம் முதல் தாய்லாந்து மார்க்கெட்டில் இந்த புதிய கார் விற்பனைக்கு வர இருக்கிறது. இதைத்தொடர்ந்து, இந்தியாவிலும் இந்த கார் விற்பனைக்கு வருவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக ஆட்டோமொபைல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

More from DriveSpark

Article Published On: Thursday, May 23, 2013, 11:11 [IST]
English summary
Looks like Mitsubishi is going the same way as its Japanese counterpart Honda. Mitsubishi has revealed the new Attrage compact sedan, which is an extended version of the Mirage hatchback. Mitsubishi Attrage will head to showrooms in Thailand by July.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+