சிறப்புக்கு சிறப்பு சேர்க்கும் அம்சங்களுடன் பஜேரோ ஸ்போர்ட்!
மிட்சுபிஷி பஜேரோ ஸ்போர்ட் எஸ்யூவி விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு ஓர் ஆண்டுகள் நிறைவு பெறுவதை கொண்டாடும் வகையில், கூடுதல் அம்சங்களுடன் ஸ்பெஷல் எடிசன் மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
சிறந்த ஆஃப்ரோடு தகவமைப்புகள் கொண்ட எஸ்யூவியாக போற்றப்படும் பஜேரோ ஸ்போர்ட்டுக்கு இந்த கூடுதல் ஆக்சஸெரீஸ்கள் கூடுதல் மதிப்பு தரும் என ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் தலைவர் உத்தம் போஸ் தெரிவித்தார். புதிய பஜேரோ ஸ்போர்ட்டில் இருக்கும் அம்சங்கள் குறித்து ஸ்லைடரில் காணலாம்.

கூடுதல் அம்சங்கள்
டச்ஸ்கிரீன் சிஸ்டத்துடன் கூடிய நேவிகேஷன் மற்றும் ஆடியோ சிஸ்டம், ரியர் வியூ கேமரா, ரியர் ஸ்பாய்லர், பாடி கலர் பம்பர், மட்கார்டு மற்றும் ஸ்பெஷல் எடிசன் பேட்ஜ் ஆகியவையும் கூடுதல் ஆக்சஸெரீஸ்களாக சேர்க்கப்பட்டுள்ளது.

எஞ்சின்
இந்த எஸ்யூவியில் 175 எச்பி பவரை அளிக்கும் 2.5 லிட்டர் காமன் ரயில் டீசல் எஞ்சினையும், அதனுடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸையும் கொண்டுள்ளது.

ஆல் வீல் டிரைவ்
இந்த எஸ்யூவியில் மிட்சுபிஷியின் சூப்பர் செலக்ட் ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் கொண்டது. இந்த ஆல் வீல் டிரைவ் சிஸ்டத்தின் சிறப்பம்சம், சாலை நிலைகளுக்கு ஏற்ப 3 விதமான டிரைவ் சிஸ்டத்தை மாற்றிக் கொள்ளலாம். நகர்ப்புறத்தில் செல்லும்போது ஆல் வீல் டிரைவ் சிஸ்டத்தை ஆஃப் செய்தால், அதிக எரிபொருள் சிக்கனத்தை பெற முடியும்.

சென்னையில் உற்பத்தி
இந்த எஸ்யூவி சென்னை, திருவள்ளூரில் உள்ள ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் ஆலையில்தான் உற்பத்தி செய்யப்படுகிறது.

விலை
முதலாண்டு ஸ்பெஷல் எடிசன் பஜேரோ ஸ்போர்ட் ரூ.23.56 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு கிடைக்கும்.


Click it and Unblock the Notifications








