அனைத்து கார்களையும் இந்தியாவில் அசெம்பிள் செய்ய ஜேஎல்ஆர் ஆய்வு

By Saravana
Evoque
இறக்குமதி கார்களுக்கு பட்ஜெட்டில் அதிக வரி விதிக்கப்பட்டிருப்பது சொகுசு கார் நிறுவனங்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது. ஆடி, பிஎம்டபிள்யூ, பென்ஸ் உள்ளிட்ட முன்னணி சொகுசு கார் நிறுவனங்கள் இறக்குமதியை தவிர்க்க மாற்று வழியை தேடி வருகின்றன. இந்த நிலையில், டாடாவின் கீழ் இயங்கும் ஜாகுவார் லேண்ட்ரோவர் நிறுவனங்கள் இந்த அறிவிப்பை கண்டு அலட்டிக் கொள்ளவில்லை.

காரணம், டாடாவின் துணையுடன் தனது அனைத்து கார்களையும் இந்தியாவிலேயே தயாரித்து விற்பனை செய்யவும், சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் திட்டமிட்டுள்ளது. இதைவிட முக்கிய காரணம் ஒன்றும் இருக்கிறது.

இங்கிலாந்தை ஒப்பிடும்போது இந்தியாவில் உற்பத்தி செலவீனம் மிக குறைவாக இருப்பதும், தகுதிவாய்ந்த பணியாளர்கள் குறைந்த சம்பளத்தில் கிடைப்பதும் காரணங்களாக முன்வைக்கப்பட்டு இதுதான் சரியான சமயம் என விறுவிறு என சாதக, பாதங்களை ஆராயும் பணிகளில் டாடாவின் ஜாகுவார் லேண்ட்ரோவர் நிறுவனம் இறங்கியுள்ளது.

இதுதான் சரியான சமயம் என்பதற்கு அர்த்தம். ஆடி, பிஎம்டபிள்யூ உள்ளிட்ட நிறுவனங்களை எளிதில் பின்னுக்குத் தள்ள இதையே சரியான வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ள ஜாகுவார் லேண்ட்ரோவர் திட்டமிட்டுள்ளது. லேண்ட்ரோவரின் ப்ரிலாண்டர் 2 மற்றும் ஜாகுவார் எக்ஸ்எஃப் கார்கள் இந்தியாவில் தற்போது அசெம்பிள் செய்யப்படுகின்றன.

இதைத்தொடர்ந்து, எவோக் உள்ளிட்ட அதிகம் விற்பனையாகும் மாடல்களையும் இந்திய மண்ணில் அசெம்பிள் செய்ய ஜாகுவார் லேண்ட்ரோவர் முடிவு செய்துள்ளது. டாடா ஆலைகளை சிறிது முதலீட்டில் ஜாகுவார் லேண்ட்ரோவர் கார்களை தயாரிக்கும் வகையில் மாற்ற முடியும் என்பது மிகப் பெரிய சாதகமாகியிருக்கிறது.

இதன்மூலம், ஜாகுவார் லேண்ட்ரோவர் கார்களின் விலை கணிசமாக குறையும். போட்டியாளர்களுக்கு திண்டாட்டமாகவும், வாடிக்கையாளர்களுக்கு கொண்டாட்டமாகவும் அமையும்.

More from DriveSpark

Article Published On: Wednesday, March 6, 2013, 10:04 [IST]
English summary
Jaguar and Land Rover,m the two British car brands owned by Tata Motors are considering plans to increase the number of models they produce in India.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+