டர்போ சார்ஜர் எஞ்சினுடன் பிளிர வரும் டீசல் நானோ

By Saravana
Tata Pixel
அடுத்த ஆண்டு ஏப்ரலில் டீசல் நானோ அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. மேலும், டர்போ சார்ஜருடன் டீசல் நானோ வர இருப்பதாகவும், அது மேம்படுத்தப்பட்ட மாடலாக இருக்கும் என்றும் அந்த தகவல் கூறுகிறது.

டீசல் நானோ குறித்த தகவல்கள் அவ்வப்போது வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. தற்போது வெளியான தகவல் டாடா மோட்டார்ஸ் ரகசியம் காத்து வரும் டீசல் நானோவின் எஞ்சின் தொடர்பானது.

டீசல் நானோவுக்கு பாஷ் நிறுவனம் 800சிசி டீசல் எஞ்சினை தயாரித்து வருகிறது. இந்த எஞ்சின் டர்போ சார்ஜர் துணையுடன் கூடுதல் சக்தியை வெளிப்படுத்தும் வகையில் இருக்கும் என்பதே தற்போதைய பரபரப்பான செய்தி.

டீசல் நானோவுக்கான டர்போ சார்ஜரை உலகின் முன்னணி டர்போ சார்ஜர் சப்ளையரான காரட் நிறுவனம் சப்ளை செய்ய உள்ளது தெரியவந்துள்ளது. டீசல் நானோவின் எஞ்சின் மற்றும் இதர சில விபரங்களை தனது இணையதளத்தில் இரு நாட்களுக்கு முன் காரட் வெளியிட்டது.

ஆனால், மீடியாவில் இந்த தகவல் பரபரப்பை ஏற்படுத்தியது டாடா மோட்டார்ஸ் கவனத்திற்கு சென்றதால், தற்போது அந்த பக்கம் திடீரென நீக்கப்பட்டுள்ளது. டீசல் நானோவின் எஞ்சின் 40.2 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் சக்தி கொண்டதாக இருக்கும் என காரட் இணைய பக்கத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

More from DriveSpark

Article Published On: Saturday, April 20, 2013, 15:21 [IST]
English summary
The vital details of the Tata Nano's diesel engine leaked in Internet.The turbocharged diesel engine has been revealed on the official website of the turbocharger supplier Garret.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+