டொயோட்டா இன்னோவாவின் லிமிடேட் எடிசன் மாடல் அறிமுகம்!

பண்டிகை காலத்தையொட்டி டொயோட்டா இன்னோவா எம்பிவி காரின் லிமிடேட் எடிசன் மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பிரத்யேகமான புதிய வண்ணத்தில் கூடுதல் சிறப்பம்சங்களுடன் வந்திருக்கும் இந்த புதிய டொயோட்டா இன்னோவா கார் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த மதிப்பை கொடுக்கும். விலை, சிறப்பம்சங்கள் விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.

புதிய வண்ணம்

புதிய வண்ணம்

பிரான்ஸ் மைக்கா மெட்டாலிக் என்ற புதிய வண்ணத்தில் இந்த லிமிடேட் எடிசன் மாடல் விற்பனைக்கு கிடைக்கும். ஜிஎக்ஸ் வேரியண்ட்டின் யூரோ-3 மற்றும் யூரோ-4 மாசுக்கட்டுப்பாட்டு எஞ்சின் கொண்ட மாடல்களில் கிடைக்கும்.

 சிறப்பம்சங்கள்

சிறப்பம்சங்கள்

பின்புறத்தில் லிமிடேட் எடிசன் பேட்ஜ் கொடுக்கப்பட்டிருக்கும். ஹெட்லைட் மற்றும் டெயில் லைட்டுகளை சுற்றிலும் சில்வர் அலங்கார கிரில்கள் மூலம் அழகு கூட்டப்பட்டுள்ளது. மேலும், புதிய பாடி கிராஃபிக்ஸ் ஸ்டிக்கரும் வெகுவாக கவரும்.

இன்டிரியர்

இன்டிரியர்

இரட்டை வண்ண ஃபேப்ரிக் இருக்கைகள் கொடுக்கப்பட்டுள்ளன. டச்ஸ்கிரீன் திரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளது. டிவிடி, சிடி, யுஎஸ்பி, ஆக்ஸ்-இன், புளூடூத் வசதிகள் உள்ளன. ரிமோட் கன்ட்ரோல் மூலமும் இயக்கலாம்.

பாதுகாப்பு அம்சங்கள்

பாதுகாப்பு அம்சங்கள்

இந்த லிமிடேட் எடிசன் மாடலில் டிரைவருக்கான ஏர்பேக், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் போன்றவை நிரந்தர பாதுகாப்பு அம்சங்களாக இருக்கின்றன.

விற்பனை

விற்பனை

இந்த லிமிடேட் எடிசன் மாடலில் மொத்தம் 1,500 இன்னோவா கார்கள் வரும் நவம்பர் மாதம் வரை விற்பனை செய்யப்படும்.

விலை

விலை

இந்த புதிய லிமிடேட் எடிசன் டொயோட்டா இன்னோவா கார் ரூ.12.91 லட்சம் முதல் ரூ.13 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கும். புதிய இன்னோவா லிமிடேட் எடிசன் மாடலுக்கான முன்பதிவு, டெலிவிரி இன்று முதல் துவங்குகிறது. இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை நகரங்களில் உள்ள ஷோரூம்களில் லிமிடேட் எடிசன் ஆக்சஸெரீஸ் பேக் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Wednesday, September 3, 2014, 16:24 [IST]
English summary
In time for the festive season, Toyota Kirloskar Motor Pvt. Ltd. (TKM) today announced the launch of the ‘Toyota Innova Limited Edition 2014’. Making it a perfect gift to take home this festive season, the new car is available in an exclusive brand new colour - Bronze Mica Metallic and the popular Silver Mica Metallic.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+