இந்தியாவில் விற்பனைக்கு வந்தது புதிய ஆடி ஏ3 கேப்ரியோ கார்!
இந்தியாவில் புதிய ஆடி ஏ3 காரின் கேப்ரியோலெட் கார் மாடல் டெல்லியில் நடந்து வரும் நிகழ்ச்சியில் சற்றுமுன் அறிமுகம் செய்யப்பட்டது. இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட இருக்கும் இந்த புதிய கன்வெர்ட்டிபிள் மாடல் பல்வேறு சிறப்பம்சங்களுடன் இந்திய வாடிக்கையாளர்களை வசீகரிக்க வந்துள்ளது.
இந்த செக்மென்ட்டில் வந்திருக்கும் முதல் கன்வெர்ட்டிபிள் மாடல் என்பதால் தற்போதைக்கு இந்த காருக்க நேரடி போட்டி இல்லை. பெட்ரோல் எஞ்சின் மாடலில் ஒரே வேரியண்ட்டில் வந்திருக்கும் இந்த புதிய காருக்கு சிறப்பு ஆக்சஸெரீகள் மற்றும் கஸ்டமைஸ் வசதிகளை ஆடி கார் நிறுவனம் வழங்குகிறது. இந்த புதிய காரின் கூடுதல் தகவல்கள் மற்றும் படங்களை ஸ்லைடரில் காணலாம்.

தோற்றம்
இந்தியாவில் விற்பனையில் இருக்கும் ஆடி ஏ3 செடான் காரின் கன்வெர்ட்டிபிள் மாடலாக இது விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. மேட் ஃபினிஷ் செய்யப்பட்டிருக்கும் இந்த புதிய காரில் பை ஸினான் ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள் போன்றவை வழக்கமான ஆடி காருக்குரிய சிறப்பம்சங்களுடன் மிடுக்காக இருக்கிறது. 17 இஞ்ச் அலுமினியம் காஸ்ட் வீல்களும் காரின் தோற்றத்தை கவர்ச்சியாக்குகிறது.

கேபின்
6 விதமான இன்டிரியர் வண்ணங்களில் தேர்வு செய்துகொள்ளலாம். 7 இஞ்ச் எம்எம்ஐ மானிட்டர் மற்றும் நேவிகேஷன் வசதி உள்ளது. பேங்க் அண்ட் ஒலுஃப்சென் ஆடியோ சிஸ்டம் ஆப்ஷனலாக பெற்றுக் கொளளலாம். டியூவல் ஸோன் ஏசி, ஆடி டிடி காரைப் போன்றே ஏசி வென்ட்டுகள், மழை மற்றும் வெளிச்சத்தை உணர்ந்து செயல்படும் ஹெட்லைட் மற்றும் வைப்பர்கள், க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம் ஆகிய வசதிகள் உள்ளன.

ஹைட்ராலிக் கூரை
இந்த காரில் எலக்ட்ரோ - ஹைட்ராலிக் சிஸ்டத்தில் மடக்கி விரிக்கும் வசதிகொண்ட சாஃப்ட் டாப் கூரை உள்ளது. மணிக்கு 50 கிமீ வேகத்தில் செல்லும்போதுகூட இந்த கூரையை மடக்கி திறக்கலாம். வெறும் 18 வினாடிகளில் திறக்கவும், மூடிக்கொள்ளும் என்பது மற்றொரு சிறப்பு.

எஞ்சின்
இந்த புதிய ஆடி ஏ3 கேப்ரியோலெட் மாடலில் 1.8 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் உள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 178 பிஎச்பி பவரையும், 250 என்எம் டார்க்கையும் அளிக்கும். இதனுடன் 7 ஸ்பீடு எஸ் ட்ரோனிக் ட்வின் கிளட்ச் டிரான்ஸ்மிஷன் இணைந்து செயலாற்றும்.

பெர்ஃபார்மென்ஸ்
இந்த புதிய கன்வெர்ட்டிபிள் மாடல் கார் 0 -100 கிமீ வேகத்தை 7.8 வினாடிகளில் கடந்துவிடும் என்பதோடு, அதிகபட்சமாக மணிக்கு 242 கிமீ வேகத்திலும் செல்லும்.

பாதுகாப்பு அம்சங்கள்
இந்த காரில் கே- டிசைன் சாஃப்ட் டாப் பொருத்தப்பட்டிருக்கிறது. விபத்தை தவிர்க்கும் விதத்தில் ரோல்ஓவர் புரொடெக்ஷன் சிஸ்டம் உள்ளது. ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், ஏர்பேக்குகள் உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகளும் கொடுக்கப்பட்டுள்ளன..

விலை
ரூ.45.75 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் இந்த புதிய கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. இந்த காரைத் தொடர்ந்து ஏ3 காரின் 'ஹேட்ச்பேக்' மாடலையும் இந்தியாவில் அறிமுகம் செய்வதற்கு ஆடி கார் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications








