ரூ.92.9 லட்சத்தில் புதிய பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் கார் அறிமுகம்
ரூ.92.90 லட்சம் ஆரம்ப விலையில் பிஎம்டபிள்யூவின் புதிய 7 சீரிஸ் சொகுசு கார் மும்பையில் நடந்த விழாவில் சற்றுமுன் அறிமுகம் செய்யப்பட்டது. வரும் 1ந் தேதி முதல் இந்த காரின் டெலிவிரி துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெட்ரோல், டீசல் மாடலில் புதிய 7 சீரிஸ் விற்பனைக்கு கிடைக்கும். இதன் டீசல் எஞ்சின் அதிக டார்க்கை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கும். 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் கொண்டதாக வந்துள்ளது. இதுதவிர, டிரைவர் மற்றும் பயணிகளுக்கான பல்வேறு வசதிகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்களுடன் வந்திருக்கிறது.

மேலும், இதன் டீசல் மாடல் சென்னை ஆலையில் உற்பத்தி செய்யப்பட உள்ளது. பெட்ரோல் மாடல் இறக்குமதி செய்து விற்பனை செய்யப்பட உள்ளது. இந்த கார் 749எல்ஐ, 750எல்ஐ மற்றும் 760எல்ஐ ஆகிய மூன்று பெட்ரோல் வேரியண்ட்களில் முறையே ரூ.1.27 கோடி முதல் ரூ.1.73 கோடி வரையிலான விலையில் கிடைக்கும்.


Click it and Unblock the Notifications








