புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்5 எஸ்யூவி விற்பனைக்கு வந்தது!

By Saravana

இந்தியாவில் புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்5 எஸ்யூவி இன்று விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. புனேயில் நடந்த நிகழ்ச்சியில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த புதிய எஸ்யூவி முந்தைய மாடலைவிட பல கூடுதல் அம்சங்களை பெற்றுள்ளது.

மேலும், புதிய எக்ஸ்5 எஸ்யூவி எக்ஸ்டிரைவ் 30டி என்ற ஒரே ஒரு வேரியண்ட்டில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பிற வேரியண்ட்டுகள் பின்னர் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளன.


எல்இடி ஹெட்லைட்

எல்இடி ஹெட்லைட்

புதிய அடாப்டிவ் எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி பனி விளக்குகள் போன்றவை குறிப்பிட்டு கூறலாம். டெயில் லைட்டுகள் பெரிதாகியுள்ளன. இதுதவிர, கண்களை கவரும் அம்சங்கள் பலவற்றை சேர்த்துள்ளது பிஎம்டபிள்யூ.

 எஞ்சின்

எஞ்சின்

புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்5 எஸ்யூவியில் 6 சிலிண்டர்கள் கொண்ட 2993 சிசி எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 258 எச்பி பவரையும், 560 என்எம் டார்க்கையும் அளிக்கும். 8 ஸ்பீடு ஸ்டெப்ட்ரோனிக் ஸ்போர்ட் டிரான்ஸ்மிஷன் கொண்டுள்ளது.

சிறப்பம்சங்கள்

சிறப்பம்சங்கள்

பனரோமிக் சன்ரூஃப், 4 ஸோன் கிளைமேட் கன்ட்ரோல், 3 வண்ணங்களில் ஒளிரும் ஆம்பியன் லைட்டிங் என பல சிறப்பு வசதிகளை கொண்டுள்ளது.

பாதுகாப்பு

பாதுகாப்பு

கார்னர் பிரேக்கிங் கன்ட்ரோல், டைனமிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், ரன் பிளாட் டயர்கள், ஏர்பேக்குகள் என பலவிதமான பாதுகாப்பு அம்சங்களை கொண்டுள்ளது.

விலை

விலை

ஆடி க்யூ7 மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் எம் கிளாஸ் மாடல்களுடன் போட்டி போடும் இந்த புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்5 எஸ்யூவி ரூ.70.9 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் ரீகால்

அமெரிக்காவில் ரீகால்

இன்று இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருக்கும் நிலையில், அமெரிக்காவில் விற்பனை செய்யப்பட்டிருக்கும் இதே எக்ஸ்5 மாடல் எஸ்யூவிகளை பிஎம்டபிள்யூ திரும்ப அழைத்துள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் 12 முதல் கடந்த மார்ச் 10ந் தேதி வரை தயாரிக்கப்பட்ட எக்ஸ்5 எஸ்யூவிகளில் சைல்டு லாக்கில் இருக்கும் பிரச்னையை சரிசெய்து தர இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Thursday, May 29, 2014, 18:23 [IST]
English summary
BMW's all-new 2014 X5 SUV was launched today in Pune. The flagship SUV of the German manufacturer is going to cost buyers INR 70,90,000. The SUV will initially only be available in the xDrive 30d Pure Design Experience trim - other variants will follow.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+