ரூ.4 லட்சத்திற்குள் குட்டி அம்பாசடரை அறிமுகப்படுத்த எச்எம் திட்டம்

By Saravana

4 மீட்டருக்கும் குறைவான நீளத்துடன் வர இருக்கும் காம்பெக்ட் அம்பாசடர் கார் ரூ.4 லட்சத்திற்கும் குறைவான விலையில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அம்பாசடர் பிராண்டுக்கு புத்துயிர் கொடுக்கும் முயற்சிகளை ஹிந்துஸ்தான் மேற்கொண்டு வருகிறது.

தற்போதைய கார் மாடல்களுடன் போட்டி போடும் விதத்தில் 4 மீட்டருக்கும் குறைவான நீளம் கொண்ட அம்பாசடரை ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் வடிவமைத்து வருகிறது. நடப்பு நிதி ஆண்டின் இறுதிக்குள் இந்த குட்டி அம்பாசடர் மார்க்கெட்டில் அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது. இந்த நிலையில், 4 மீட்டருக்கும் குறைவான நீளத்துடன் வடிவமைக்கப்படுவதால் 12 சதவீத வரிச்சலுகையை பெற முடியும்.

Ambassador

இதைவைத்து ரூ.4 லட்சத்திற்கும் குறைவான விலையில் புதிய அம்பாசடரை விற்பனைக்கு கொண்டு வருவதற்கு ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது மிக சவாலான விலையாக இருக்கும் என்பதால், குட்டி அம்பாசடருக்கு வாடிக்கையாளர் மத்தியில், குறிப்பாக, ஊரகப் பகுதிகளில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என அந்த நிறுவனம் நம்புவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

More from DriveSpark

Article Published On: Tuesday, April 23, 2013, 10:27 [IST]
English summary
As per an official statement might be possible the upcoming compact Ambassador will get ready soon and hit the market in the month of March year 2014. The pricing of the car predictably quoted at around Rs 4 lakhs for consumers.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+