ரூ.5.99 லட்சம் விலையில் விற்பனைக்கு வந்தது ஃபியட் அவென்ச்சுரா
பெரும் எதிர்பார்ப்பை கிளப்பிய ஃபியட் அவென்ச்சுரா கிராஸ்ஓவர் மாடல் நம் நாட்டு மார்க்கெட்டில் இன்று முறைப்படி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.
இரண்டு பெட்ரோல் மற்றும் மூன்று டீசல் மாடல்களில் ஃபியட் அவென்ச்சுரா விற்பனைக்கு வந்துள்ளது. இந்த புதிய கார் மாடலில் பல வசதிகள் நிரந்தர அம்சங்களாக இடம்பெற்றிருக்கின்றன. கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

வேரியண்ட் விபரம்
பெட்ரோல் மாடல் ஆக்டிவ், டைனமிக் ஆகிய இரண்டு வேரியண்ட்டுகளிலும், டீசல் மாடல் ஆக்டிவ், டைனமிக் மற்றும் எமோஷன் ஆகிய மாடல்களிலும் கிடைக்கும்.

வடிவம்
3,989மிமீ நீளம், 1,706மிமீ அகலம், 1,542மிமீ உயரம் கொண்டதாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இதன் வீல் பேஸ் 2,510மிமீ ஆகும்.

முக்கிய அம்சங்கள்
பாடி கிளாடிங், ரூஃப் ரெயில் புதிய கிரில், புரொஜெக்டர் ஹெட்லைட், எல்இடி விளக்குகள், ரியர் ஏசி வென்ட்டுகள், சாஃப்ட் டச் அப்ஹோல்ஸ்டரி, ஆம்பியன்ட் லைட்டுகள் போன்றவை முக்கிய அம்சங்களாக கூறலாம். இன்ஃபோடெயிமென்ட் சிஸ்டம் ஆப்ஷனலாக கிடைக்கும்.

எஞ்சின்
அவென்ச்சுராவில் 90 பிஎஸ் பவரையும், 115என்எம் டார்க்கையும் அளிக்கும் 1.4லிட்டர் ஃபயர் பெட்ரோல் எஞ்சினும், டீசல் மாடலில் 90 பிஎஸ் பவரையும், 209 என்எம் டார்க்கையும் அளிக்கும் 1.3 லிட்டர் மல்டிஜெட் எஞ்சினும் பொருத்தப்பட்டுள்ளது. இரண்டிலும் 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்டது.

மைலேஜ்
பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 14.4கிமீ மைலேஜையும், டீசல் மாடல் லிட்டருக்கு 20.5 மைலேஜையும் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வண்ணங்கள்
ஸபரெனோ ஆரஞ்ச், பிரான்சோ டேன், மினிமம் கிரே, எக்ஸோட்டிகா ரெட், ஹிப் ஹாப் பிளாக் மற்றும் வோக்கல் ஒயிட் ஆகிய 6 வண்ணங்களில் கிடைக்கும்.

விலை விபரம்
பெட்ரோல் மாடல்
ஆக்டிவ்- ரூ. 5.99 லட்சம்
டைனமிக்- ரூ. 7.05 லட்சம்
டீசல் மாடல்
ஆக்டிவ்- ரூ. 6.89 லட்சம்
டைனமிக்- ரூ. 7.65 லட்சம்
எமோஷன்- ரூ. 8.17 லட்சம்
அனைத்தும் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலை


Click it and Unblock the Notifications








